மேலும் அறிய

CM Stalin on Jai Bhim: முதலமைச்சர் ஸ்டாலினை கவர்ந்த திரைப்படம் எது தெரியுமா?

ஜெயபீம் திரைப்படம் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஜெயபீம் திரைப்படம் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சென்னையில் முத்தமிழ் பேரவையின் 41 ஆவது ஆண்டு இசை விழாவில் பேசிய முதல்வர், “ கலைகள் மூட நம்பிக்கைகளை விதைக்க கூடாது. மக்களுக்காக கலைகள் இருக்க வேண்டும். கலையில் மூடநம்பிக்கைகளை விதைக்கக் கூடாது. இசை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்று வலியுறுத்திய இயக்கம் திமுக. 

ஜெய்பீம் திரைப்படத்துக்கு முதல்வர் புகழாரம்.  

ஜெயபீம் திரைப்படம் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெய்பீம் திரைப்படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. சிறைச்சாலை சித்ரவதையை உண்மையில் அனுபவித்தவன் நான். அதனால் மற்றவர்களை விட என்னை அந்தப்படம் பெரிதும் பாதித்தது. 

கலைஞர்களுக்கு விருது வழங்கியதின் மூலம் நான்  பெருமை அடைகிறேன். கலைஞரால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் முத்தமிழ் பேரவை. கலைகளின் நோக்கம் மக்களை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். கலைகளில் முற்போக்கு எண்ணம் இருக்க வேண்டும். கலையின் மூலமாக மனிதனின் சிந்தனை கதவு திறக்கப்பட வேண்டும். சினிமா பாடல்களை பாடும் அளவுக்குத்தான் எனக்கு இசை ஆர்வம் உண்டு. கலையும், மக்களும் வளர வேண்டும்.” என்று பேசினார். 

தொடர்ந்து பேசிய ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல்  "முகவரி அற்ற மக்களுக்கு முகவரி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர்" என்று பேசினார்

ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் 

முன்னதாக, Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘ஜெய் பீம்.  சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறிய ஜெய்பீம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அரசியல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பார்த்து தூக்கம் வரவில்லை என பாராட்டினார்.

சர்ச்சை 

படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் அக்னி கலசம் வைக்கப்பட்டதும் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.  குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து இந்தக்காட்சிகள் வைக்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன. படக்குழுவுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன. போராட்டங்கள் சில நடத்தப்பட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை விடுத்த படத்தில் இயக்குநர் ஞானவேல்  அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதன் பின்னர் சர்ச்சைகள் அடங்கியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Breaking News LIVE 7th NOV 2024:  12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Breaking News LIVE 7th NOV 2024: 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Sai Pallavi - Sivakarthikeyan  : தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
Embed widget