பனை கொட்டையை கடித்த சாதனா... கொந்தளித்த ரசிகர்கள்... விழிப்புணர்வு என விளக்கம்!
சாதனாவின் கொட்டை கடிக்கும் வீடியோ... சமூக வலைதளத்தில் வைரலானது. டீசண்ட் இல்லாமல் இப்படி சாப்பிடுகிறாரே என பலரும் ஓட்டத் தொடங்கினர்.
முன்னாள் டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனா, தன்னுடைய கலை சேவையை பல வழிகளில் அரங்கேற்றி வருகிறார். குறும்படம், யூடியூப் டிப்ஸ், சமையல் கலை, மீன்பிடித்தல், ஊர் சுற்றுதல் என யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது ஆர்பாட்டம் தான். சமீபத்தில் கால்வாயில் பாவடையின் மீன்பிடித்து அதே உடையோடு ரோட்டில் நடந்து சென்று பதிவிட்ட வீடியோ வைரல் ஆனது.
இடையிடையே விழிப்புணர்வு வீடியோக்கள் வேறு அவர் வெளியிடுவார். அந்த வகையில் கிராமம் ஒன்றில், நபனை கொட்டைகளை சப்பி சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மூன்று கொட்டைகள் கொண்ட அந்த பனை பழத்தை சுடாமல், அப்படியே பச்சையாக பிய்த்து உண்டு டெமோ காண்பித்த சாதனா, அவற்றை கடித்து, குதறி, சுவைத்து மகிழ்ந்தார். அருகில் ஒரு பாட்டியை வைத்துக் கொண்டு அவருக்கும் எச்சில் ஊற வைத்ததுடன், பார்ப்பவருக்கும் எச்சில் ஊற வைத்தார்.
இந்நிலையில் சாதனாவின் கொட்டை கடிக்கும் வீடியோ... சமூக வலைதளத்தில் வைரலானது. டீசண்ட் இல்லாமல் இப்படி சாப்பிடுகிறாரே என பலரும் ஓட்டத் தொடங்கினர். ஆனால், பனைமரங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில், பனை மரத்திலிருந்து கிடைக்கும் பழத்தின் சுவை மற்றும் அதன் கொட்டை தரும் சுவையை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக தான் இந்த வீடியோ வெளியிட்டதாக அவர் நம்புகிறார். ஆனால் அவரை பின் தொடரும் சிலர் அதை ஏற்பதாகவில்லை. வழக்கம் போல, சாதனாவின் இந்த வீடியோவையும் ஓட்டி வருகின்றனர். போதாக்குறைக்கு அந்த வீடியோவில் மீம்ஸ் கண்டன்டுகள் அதிகம் இருப்பதால், அனைவரும் புகுந்து விளையாடுகின்றனர்.
இதோ சாதனாவின் அந்த பனை கொட்டை கடிக்கும் வீடியோவின் முழுப்பகுதி...
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?
சாதனா தொடர்பான மேலும் செய்திகள் படிக்க...
‛அபோகலிப்டா‛ அரபு வெர்சனில் திருச்சி சாதனா... ஆதாம்... ஏவாலாக காட்டுக்குள் வேட்டு!#TikTok #TrichySadhana #ShortFilm #Viralhttps://t.co/WE1GNvwhSZ
— ABP Nadu (@abpnadu) September 15, 2021