மேலும் அறிய

Thunivu Varisu Release Date:கொண்டாட ரெடியா இருங்க... வாரிசு, துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல தியேட்டர்!

பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு மற்றும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியாகியுள்ள தகவல் ஒன்று ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு மற்றும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியாகியுள்ள தகவல் ஒன்று ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாரிசு vs துணிவு 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது என சொல்லலாம். காரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக களமிறங்குவதால் எந்த படம் ஹிட்டாக போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ariesplex SL Cinemas (@ariesplexslcinemas)

வாரிசு 

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதேசமயம் படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். 

முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

துணிவு 

மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

ரிலீஸ் எப்போது 

பொங்கலுக்கு இன்னும் ஒரு  வாரமே உள்ள நிலையில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள Aries Plex SL  சினிமா தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதியும், வாரிசு படம் ஜனவரி 12 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபடங்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும், முதல் காட்சி அதிகாலை 4 மணி எனவும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், இரு படங்களின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலுடன் ஒத்துப்போவதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Embed widget