மேலும் அறிய

Movie Releases: கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?

This Week Movie Releases: ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்களில் திரையரங்கில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ முதல் ஃபகத் ஃபாசில் நடித்துள்ள ஆவேஷம் வரை பல்வேறு படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன.

ஏப்ரல் 10 , 11 ரிலீஸ்

தங்கலான் , இந்தியன் 2 , விடாமுயற்சி, வேட்டையன் , கங்குவா என சொல்வதற்கு தமிழ் ரசிகர்களிடம் நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் எல்லா படங்களும் ரிலீஸாக இன்னும்  சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். தற்போதைக்கு சின்ன பட்ஜெட் படங்களே திரையரங்கில் வெளியாக இருக்கின்றன. அதே நேரத்தில் இந்த ஆண்டு அடுத்தடுத்து 100 கோடி வசூலை எட்டியிருக்கின்றன. வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் திரையரங்கில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.

டியர்

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி ப்ருத்விராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் டியர். ஜி.வி பிரகாஷ் குமார் , ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடித்துள்ளார்கள். குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

ரோமியோ

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி , யோகி பாபு, விடிவி கனேஷ் நடித்துள்ள படம் ரோமியோ. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

ஆவேஷம்

மலையாளத்தில் தற்போது 'ஆவேஷம்' படத்தில் நடித்து வருகிறார் பகத் ஃபாசில்.  கடந்த ஆண்டு ரொமான்சம் படத்தை இயக்கிய ஜீது மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கும்பலாங்கி நைட்ஸ் , மாலிக் , மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அன்வர் ரஷீத் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி  இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

மைதான்

பதாய் ஹோ படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட இயக்குநர் அமித் ஷர்மா. தற்போது அவர் இயக்கியுள்ள படம் மைதான் . இப்படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியாமணி மற்றும் பலர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

படேமியான் சோட்டேமியான்

அலி அபாஸ் ஜாஃபர் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் படம் படே மியா சோட்டே மியா. அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் இணைந்து இப்படத்தில் கலக்க இருக்கிறார்கள். பிருத்விராஜ் , மனுஷி சில்லர், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

வருஷங்களுக்கு சேஷம்

மலையாளத்தில் ஹ்ருதயம் , தட்டத்தின் மரயத்து உள்ளிட்ட படங்களை இயக்கிய வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வருஷங்களுக்கு விசேஷம் .பிரணவ் மோகன்லால், தியான் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி, வினீத் ஸ்ரீனிவாசன், பாசில் ஜோசப், அஜு வர்கீஸ், நீரஜ் மாதவ், கல்யாணி பிரியதர்ஷன், நீதா பிள்ளை, அர்ஜுன் லால், நிகில் நாயர், ஷான் ரஹ்மான் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

பையா

கடந்த 2010 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் பையா. கார்த்தி , தமன்னா இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமைந்த எல்லா பாடல்களும் வைரலாகின. இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget