மேலும் அறிய

Theal Movie: என்னது... பிரபுதேவா படத்தில் டான்ஸ் இல்லையா... வரும் முன்னே கொட்டும் ‛தேள்’

தேள் திரைப்படத்தில் தனக்கு நடன காட்சியே இல்லை என பிரபுதேவா ஃபீல் செய்துள்ளார்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். பிரபுதேவா நடன அமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும்கூட. அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ்,  ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொன்மாணிக்கவேல் மட்டுமின்றி, ஹரிகுமார் இயக்கத்தில் தேள் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். இன்று தேள் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

Theal Movie: என்னது... பிரபுதேவா படத்தில் டான்ஸ் இல்லையா... வரும் முன்னே கொட்டும் ‛தேள்’

விழாவில் பேசிய பிரபுதேவா,  “ஹரிகுமாரும் நானும் உதவி நடன இயக்குநர்களாக பணியாற்றி இருக்கிறோம். பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். புதிய தளத்தில் அவர் தன் திறமையை நிரூபிக்க இருக்கிறார். இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். 

இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என ரசிகர்கள் சந்தேகப்படும் அளவுக்கு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள். தனஞ்செயனுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார். அவரும் நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஒரு தயாரிப்பாளராக ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

இந்தத் திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும், நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை  ஹரி செக் செய்துகொண்டே இருப்பார் . நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுள் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும்” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
iPhone 17e Leaked Specs.,: இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
Embed widget