ஃபிரான்ஸ்ல ஷூட்டிங்.. அசல் படத்துல இதுதான் மிஸ்ஸிங்.. - உண்மையைச் சொன்ன தயாரிப்பாளர்!
"ஃபிரான்ஸ்ல ஹாலிவுட் படம் 7 நாட்கள்ல எடுத்தாங்க. நான் 20 நாட்களுக்கு மேல அசல் படத்தை எடுத்தேன்.நான் அந்த படத்துக்கு செலவினங்களை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம். “
அஜித் குமார் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருட்செலவில் வெளியான திரைப்படம் அசல். இந்த திரைப்படத்தை சிவாஜி புரடக்ஷன்ஸ் சார்பில் , ராம்குமார் கணேசன் தயாரித்திருந்தார். ராம்குமார் நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளராக மட்டுமல்லாது ஐ, எல்.கே.ஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சித்ரா லக்ஷ்மணனுடன் நடந்த நேர்காணல் ஒன்றில் அசல் படம் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்தும், கமல் மற்றும் ரஜினியுடனான நட்பு குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் ராம்குமார் கணேசன்
View this post on Instagram
அதில்"கமல்ஹாசன் , ரஜினிகாந்தை ஒப்பிடும் பொழுது , நான் கமல்ஹாசனுடன் ரொம்ப நெருக்கமானவன். நான் 80-90 களில் அவருடன் அதிக நேரம் செலவிட்டுருக்கிறேன். அப்பா பாரிஸ் போகும் பொழுது , அவரும் வந்தாரு. அப்பா ரூம் பக்கத்திலேயே ரூம் எடுத்து 10 நாட்கள் தங்கியிருந்தாரு. ரஜினி சாரும் க்ளோஸ்தான் .ஆனா கமல் சாரை ஒப்பிடுகையில் கொஞ்சம் தூரமாகத்தான் இருப்பாரு. அஜித்தை வச்சு நான் அசல் திரைப்படம் தயாரித்தேன். அந்த படத்துக்கு பிறகு அவ்வளவு பெரிய பட்ஜெட்ல அஜித் சார் நடிச்சாரானு எனக்கு தெரியலை. நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதே கிடையாது. ஆனா நிறைய பணம் செல்வழிச்சாங்க . ஆனால் அதை பற்றியெல்லாம் கவலை படவே இல்லை. ஆனால் படம் அந்த அளவுக்கு ஓடல.
View this post on Instagram
படம் ஹிட் ஆனால் செலவு பண்ணதை எடுத்துடலாம்னு நினைத்தேன் ஆனால் ஆகல , பரவாயில்லை. காரணம் படத்துல எமோஷனல் டிராமா இல்லாம போயிடுச்சு. ஹை கிளாஸ் மக்களுக்கு பிடிச்ச படமாயிடுச்சு. இப்போ கூட வெளிநாடுகள்ல இருந்து நிறைய நண்பர்கள் படத்தை பார்த்தோம் செமனு சொல்லுறாங்க. ஆனால் ஜென்ரல் ஆடியன்ஸுக்கு ஏற்ற படமா அது இல்லை. ஃபிரான்ஸ்ல ஹாலிவுட் படம் 7 நாட்கள்ல எடுத்தாங்க. நான் 20 நாட்களுக்கு மேல அசல் படத்தை எடுத்தேன். நான் அந்த படத்துக்கு செலவினங்களை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம். “ என தெரிவித்துள்ளார்.