![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Theatre and OTT Release : அடேங்கப்பா.. இந்த வாரம் இத்தனை படங்களா? தியேட்டர் முதல் ஓடிடி வரை வெளியாகும் படங்களில் பட்டியல்!
இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் வெளியாகின்றன என தெரிந்து கொள்ளலாம்.
![Theatre and OTT Release : அடேங்கப்பா.. இந்த வாரம் இத்தனை படங்களா? தியேட்டர் முதல் ஓடிடி வரை வெளியாகும் படங்களில் பட்டியல்! The list of movies releasing this week in theatre and OTT platforms Theatre and OTT Release : அடேங்கப்பா.. இந்த வாரம் இத்தனை படங்களா? தியேட்டர் முதல் ஓடிடி வரை வெளியாகும் படங்களில் பட்டியல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/16/4c02f533cd1398f85720fb02c798b5f81678985325723224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதை பற்றி தெரிந்து கொள்வதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுதியாக இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் திரையரங்கில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்றும் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது பற்றியும் பார்க்கலாம்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த வாரம் தான் அதிகபட்சமாக 11 திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி திரை ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தியாக அமைந்துள்ளது.
கண்ணை நம்பாதே :
மு. முருகன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. இப்படத்தில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், நடிகை பூமிகா, சுபிக்ஷா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை திரையரங்கியில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.
கோஸ்ட்டி :
எஸ். கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் 'கோஸ்ட்டி'. இதில் ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ரெட்டின் கிங்சிலி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏராளமான நகைச்சுவை பட்டாளம் இப்படத்தில் நடித்திருப்பதால் காமெடி சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்ஜா :
காந்தாரா, கே.ஜி.எஃப் போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து கன்னட திரையுலகில் இருந்து அடுத்து வெளியாகும் பான் இந்திய திரைப்படம் கப்ஜா. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோவாக உபேந்திரா நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிச்சா சுதீப்.
இது மட்டுமின்றி தமிழில் குடிமகன், ராஜா மகள், D3 உள்ளிட்ட திரைப்படங்களும், தெலுங்கில் ஒரு படமும், இந்தியில் இரெண்டு திரைப்படங்களும், ஆங்கிலத்தில் இரண்டு படமும் மார்ச் 17ம் தேடியது நாளை வெளியாகின்றன.
ஓடிடி தளத்தில் நாளை வெளியாகும் திரைப்படங்கள் :
மிர்ச்சி சிவா - அஞ்சு குரியன் நடிப்பில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் - சம்யுக்தா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'வாத்தி' திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிசில் 120 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
சத்தி கானி ரெண்டு ஏகராளு (தெலுங்கு) - ஆஹா
ரைட்டர் பத்மபூஷன் (தெலுங்கு ) - ஜீ 5
குட் டே (ஹிந்தி) - நெட்பிளிக்ஸ்
கந்தாட குடி (கன்னடம்) - அமேசான் பிரைம்
ராக்கெட் பாய்ஸ் எஸ்2 (இந்தி வெப் சீரிஸ்) - சோனி லைவ்
ஆங்கிலம் :
Am I Next - ஜீ 5
In His Shadow - நெட்பிளிக்ஸ்
Noise - நெட்பிளிக்ஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)