This Week Movie Release: 2023 ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை - நாளை மட்டும் 11 படங்கள் ரிலீஸ்..!
This week release movies : டிசம்பர் 29 (வெள்ளிக்கிழமை) அன்று 11 படங்கள் ரிலீசாகவுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பது பற்றி காணலாம்.
வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் திரை ரசிகர்களை சந்தோஷ படுத்துவதற்காக பல திரைப்படங்கள் வெளியாகும். அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29), 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
யாவரும் வல்லவரே :
N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரகனி, யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'யாவரும் வல்லவரே'. ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், ரித்விகா, தேவதர்ஷினி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ரூட் நம்பர் 17 :
நேநி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் அமர் ராமசந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா லீட் ரோலில் நடித்துள்ளனர்.
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது :
ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் முனீஷ்காந்த், யாஷிகா ஆனந்த், ஹரிஜ, ரித்விகா மற்றும் பலரின் நடிப்பில் நகைச்சுவை ஜானரில் உருவாகியுள்ளது.
நந்திவர்மன் :
ஏகே பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி. பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கவுடா நடிப்பில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க போஸ் வெங்கட், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதிமாறன் :
லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவனா, எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜெய்விஜயம் :
நடிகர் ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அக்ஷயா கண்டமுத்தன் ஹீரோயினாக நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது.
சரக்கு :
நடிகர் மன்சூர் அலிகான் இயக்கி நடித்துள்ள திரைப்படம் சரக்கு. மதுவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு ஒரு புரட்சி படைப்பு தான் இப்படம்.
பேய்க்கு கல்யாணம் :
சுச்சி ஈஸ்வர் இயக்கத்தில் ராணிப்பேட்டை எஸ்.ராஜ்குமார் மற்றும் ஷர்மிளா நடிகர்களாக அறிமுகமாகும் இப்படத்தில் மாதேஷ், சிவகாசி முருகேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மூத்தகுடி :
ரவி பார்கவன் இயக்கத்தில் பிரகாஷ் சந்திரா, தருண் கோபி, அன்விஷா,ஆர்.சுந்தர்ராஜன், சிங்கம்புலி , பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா, ராஜ் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மூன்றாம் மனிதன் :
ராம் தேவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பேமிலி ஆடியன்ஸை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
வட்டார வழக்கு :
கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.