The Legend: 5 மொழிகள்.. 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள்.. மரண மாஸ் காட்டும் அண்ணாச்சி..!
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் உலக அளவில் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் உலக அளவில் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலன ஜமாவுளிக்கடைகளில் ஒன்றாக திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். லெஜண்ட் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு தானே நடித்தார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
பின்னர், நடிப்பின் மேல் ஆசை கொண்ட அவர் 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதையடுத்து, படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மாபெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜிஎன் அன்புச்செழியன் வெளியிடுகிறார். அதனைத்தொடர்ந்து பிற நாடுகளில் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் தொடர்பான தகவல்களும் வெளிவந்து கொண்டிருந்தன. அதன்படி தி லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி உலக அளவில் 2500க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்