Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்தது படக்குழு
ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
View this post on Instagram
நடிகர் ரஜினிகாந் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக காவலா படத்திற்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
பான் இந்திய படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் புரமோஷன் போதுமான அளவில் இல்லை என்பது ரசிகர்களின் கவலையாக இருந்தது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து, புரமோவுடன் புதிய அறிவிப்பை வெளியிட்டது. படக்குழு வரும் 28ஆம் தேதி இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க,
TN Cabinet: அமலாக்கத்துறை சோதனை.. மகளிர் உரிமை தொகை.. தொடங்கியது அமைச்சரவை கூட்டம்..!