மேலும் அறிய

Malavika Mohanan: 500 கோடி ரூபாய் செலவு பண்ணாலும் நடிக்க மாட்டேன்.. மாளவிகாவின் முடிவு..

கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத ரோல்களில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என கூறியுள்ளார் தங்கலான் பட நடிகை

கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் தங்கலான் பட  நடிகை மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன்

தமிழ் திரைப்பட உலகிற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர்ஸ்டார்  ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் அவர் பெரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் இராணியத் திரைப்பட இயக்குனரான மஜித் மஜிதி முதல் முதலாக இயக்கிய இந்தியத் திரைப்படமான பியாண்ட் தி க்ளவுட்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது.

இந்த படத்தின் வாயிலாக இவர் தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் ரசிகர்களையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா. சமூக வலைதளங்களில் தனது ஃபேஷனிற்காகவும் ஃபிட்னசிற்காகவும் பரவலாக அறியப்படுபவர் மாளவிகா. தனது கரீயரை மாடலாக தொடங்கியவர் என்பதாலேயே பேஷனில் மாளவிகா எப்போதும் அசத்தக்கூடியவராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் ஃபிட்னஸில் அதிகமாக கவனம் செலுத்தியும் வருகிறார்.

கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லயென்றால் நோ சொல்வேன்

தனது சினிமா வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களில் மாளவிகா நடித்து வந்தாலும் இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய அளவிலான முக்கியத்துவம் எதுவும் இருக்கவில்லை. தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள மாளவிகா இந்திய யுத்ரா என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். தனது அடுத்தப் படங்களைத் தேர்வு செய்து வரும் மாளவிகா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என கூறியுள்ளார். ”எவ்வளவு பெரிய பட்ஜட்டாக இருந்தாலும் சரி... ஏன் 500 கோடி பட்ஜட்டில் எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதில் தனது கதாபாத்திரத்திற்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே தான் அத்தகைய படங்களில் நடிப்பேன்” என் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் அதை மறந்துதான் போவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தங்கலான்

பா ரஞ்சித் இயக்கி விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Embed widget