Thalapathy 69 Title: புதிய அவதாரத்தில் களமிறங்கிய விஜய்.. வெளியானது தளபதி 69 ஃபர்ஸ்ட் லூக்
Thalapathy 69 First Look: எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜயின் கடைசி படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலில் முழுவதும் களமிறங்கிய பின் திரைவாழ்க்கைக்கு விஜய் எண்ட் கார்டு வைக்கப் போகிறார். தற்போது அவரது கடைசி படமான தளபதி 69 முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி 69
கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குனர் எச்.வினோத் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு இப்படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி தீவிரம் காட்டி வருவதால் அவரது கடைசி படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எழுந்த்து, இந்த படம் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரம் ஈடும்விதமாக அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று பேசப்பட்டது.
We call him #JanaNayagan #ஜனநாயகன் ♥️#Thalapathy69FirstLook#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir… pic.twitter.com/t16huTvbqc
— KVN Productions (@KvnProductions) January 26, 2025
ஜனநாயகன்:
இந்த நிலையில் தளபதி 69 படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தளபதி 69 படத்தின் கதையும் விஜயின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, அதை போலவே படத்தின் முதல் லுக் போஸ்டரில் விஜயை சுற்றி வெள்ளை உடையுடன் அரசியல் கட்சியினர் இருப்பது போன்று உள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படமும் அரசியல் சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த விஜய் படங்களின் முதல் லுக் போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதியும் இடம் பெற்றிருக்கும்.
இதையும் படிங்க: Ajith Kumar: "இனி நாங்கதான்" கார் பந்தயம், பட ரிலீஸ், பத்மபூஷண்! உச்சகட்ட சந்தோஷத்தில் அஜித் ரசிகர்கள்!
ஆனால் ஜனநாயகன் படத்தின் முதல் லுக் போஸ்டரில் அப்படி எதுவும் இடம் பெறவில்லை, இதனால் படம் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் உள்ளது, இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாகலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் விஜயின் அரசியல் பயணம் அடுத்த தேர்தல் இருப்பதால் விஜய் அதில் கவனம் செலுத்த உள்ளதால் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

