Thalapathy 67: ‘தளபதி 67’ படத்தில் இத்தனை பேர் நடிக்கிறார்களா? ... இணையத்தில் வெளியான லிஸ்ட்.. வைரலாகும் வீடியோ!
நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67 படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த லிஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இதுவரை படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67 படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த லிஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இதுவரை படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். கொரோனா தொற்றால் மிகவும் பொருளாதார இழப்பை சந்தித்த திரையுலகினருக்கு இப்படம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து அவர்கள் மீண்டு வர வழிவகை செய்தது.
Actress #Trisha & #PriyaAnand flying to Kashmir for #Thalapathy67 shoot 🔥🔥@actorvijay pic.twitter.com/BmLyRiBVGL
— 𝙏𝙉𝙑𝙁𝘾 (@TNVFC_OFFI) January 31, 2023
இதன்பின்னர் நடிகர் விஜய் “பீஸ்ட்”, “வாரிசு” படத்தில் நடித்து முடித்தார். லோகேஷ் கனகராஜூம் கமலை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே தான் மீண்டும் விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியானது. அவ்வப்போது இந்த படம் குறித்து விதவிதமான தகவல்கள் வெளிவர தொடங்கியது. த்ரிஷா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும், மன்சூர் அலிகான் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட தரப்பும் கிட்டதட்ட உறுதி செய்தது.
தளபதி 67 பட அறிவிப்பு
இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் மூலம் விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும், அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijay - Trisha - lokesh 🔥 at airport #Thalapathy67 #ThalapathyVijay #Trisha #LokeshKanakaraj pic.twitter.com/zqQ34tQGOj
— troll negativity (@trishafanspage) January 31, 2023
காஷ்மீர் சென்ற படக்குழு
இதற்கிடையில் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் விமானத்தில் பயணித்தவர்கள் பட்டியல் என்ற ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் நடிகைகள் த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மேலும் இணையத்தில் வெளியான வீடியோவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் உள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்டிங் ஆக உள்ளது. நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தளபதி 67 பட அப்டேட்டுகள் வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.