Thalapathy 66 Update: விஜயின், தளபதி 66 -இன் ஹாட் அப்டேட்ஸ்… இணையும் நடிகர்கள் யார், யார் தெரியுமா?
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.
விஜய்யின் தளபதி 66 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது தளபதி 66 டீம்.
தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் சமீபதில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்தும், திரைக்கதை தொடர்பாகவும் இயக்குனர் நெல்சன் இன்னும் ரிசர்ச் செய்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் கதை திரைக்கதை சுமாராக இருந்திருந்தாலும் விஜய்யின் ரசிகர் வட்டத்திற்காகவே படம் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ரசிகர்களின் பார்வை தற்போது தெலுங்கு டாப் இயக்குனர் வம்சி இயக்கும் தளபதி 66 படத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
Extremely delighted to welcome @actorsrikanth sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/U0eLPGJ2xe
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். முதல் கட்ட ஷுட்டிங்கில் குட்டியாக ஒரு பாடல் மட்டும் சென்னையில் எடுத்து விட்டு தற்போது இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் கடந்த ஒரு வாரமாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
Team #Thalapathy66 extends a warm welcome to @shaamactor @actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/6hyQKUyfWX
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022
முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவர்களெல்லாம் படத்தில் இருக்கிறார்கள் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ஒவ்வொன்றாக நேற்று அறிவித்து வந்தது. இதில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா ஆகியோரும் உடன் நடிக்கின்றனர் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாகின.
Overjoyed to welcome Sangeetha onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/BET7NKQzUU
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022
அதே போல இன்றும் காஸ்டிங் குறித்த அப்டேட்டுக்களை வந்துள்ளன. அதில் எல்லோரும் எதிர்பார்த்ததுபோல ஷாம் இடம்பெற்றுள்ளார். அவர் விஜயின் அண்ணன்களில் ஒருவராக நடிக்கிறார் என்று தகவல்கள் வந்தாலும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. பிறகு இந்த படத்தில் யோகிபாபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Happy to welcome @iYogiBabu onboard #Thalapathy66. @actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/O77ByOPbhD
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022
தளபதி 66 படத்திற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து, அதில் தளபதி 66 படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் தளபதி 66 படம் 2023 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. தளபதி 66 படத்தின் மூலம் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள பிரகாஷ் ராஜ், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் அனைவரையும் சந்திக்க உள்ளதாக கூறி தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் செய்துள்ளார்.
Samyuktha joins the cast of #Thalapathy66. Welcome aboard!@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/CQB5CNGMAL
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022
இன்று வெளியாகியுள்ள மற்ற அறிவிப்புகளின்படி, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இணைந்துள்ளார். அதோடு தமிழ் நடிகை சங்கீதாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். தற்போது கடைசியாக வெளியாகியுள்ள அறிவிப்பின்படி நடிகை, பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.