(Source: ECI/ABP News/ABP Majha)
Thalaivar 170: ரஜினி படத்தை தயாரிக்கிறேனா?.. நானே முதல் ஆளா சொல்றேன்.. போனி கபூர் சொன்ன புதுத்தகவல்!
ரஜினியும் நானும் இணைய இருப்பதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்திருக்கிறார்.
ரஜினியும் நானும் இணைய இருப்பதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “ பல வருடங்களாக ரஜினி எனக்கு நண்பர். அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் நாங்கள், எங்களது ஐடியாக்களை ஷேர் செய்து கொள்வோம். நாங்கள் இணைந்து படம் செய்ய முடிவெடுத்தால், அதை அறிவிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். அதனால், இது தொடர்பாக கசிந்து வரும் தகவல்களை நீங்கள் நம்ப வேண்டாம்.
Rajni Garu has been a friend for years. We meet regularly and keep exchanging ideas. Whenever we finalise a film to work together on, I shall be the first person to announce it. You will not have to get such ‘leaked ideas’.
— Boney Kapoor (@BoneyKapoor) February 20, 2022
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான #Thalaivar169 திரைப்படத்தை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது, இயக்குநர் நெல்சனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170-வது படத்தை பாடகர் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் அருண்ராஜா காமராஜ்(arunraja kamaraj) இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அந்த தகவலின் படி, ரஜினிகாந்திற்காக அருண்ராஜா காமராஜ் கதை ஒன்றை ரெடி செய்ததாகவும், இதனை போனிகபூரிடம் அருண்ராஜா சொன்னதாகவும், இதனையடுத்து போனி கபூர், ராகுல், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூன்று பேரும் கடந்த வெள்ளிக்கிழமை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்ததாகவும் சொல்லப்பட்டது. மேலும் கதையை கேட்ட ரஜினிக்கு கதை பிடித்து போக, கதையில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவலுக்குத்தான் தற்போது போனி கபூர் விளக்க அளித்துள்ளார்.
View this post on Instagram
முன்னதாக, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘கனா’ படத்தில் இயக்கிய அருண்ராஜ் தற்போது, ஆர்ட்டிக்கிள் 15 இன் தமிழ் ரீமேக்கான உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தை போனிகபூர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது