மேலும் அறிய

Actor Shivaji: பெண்கள் உடலை காட்டும் ஆடை தான் அழகா? - பிரபல நடிகர் சர்ச்சைப் பேச்சு!

மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேசாமல் இருக்கலாம், ஏனென்றால் அது உங்கள் சுதந்திரம் என்று அவர்கள் உணர்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்கள் அதை விரும்பாமல் இருக்கலாம். ஒரு பெண் இயற்கையைப் போன்றவள் என சிவாஜி கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் கதாநாயகிகள் அடக்கமாக உடை அணியுமாறு பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி பேசியிருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கம்பேக் கொடுத்த சிவாஜி

1990களின் காலக்கட்டத்தில் தெலுங்கில் பல படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானவராக திகழ்ந்தவர் நடிகர் சிவாஜி. 2016ம் ஆண்டுக்குப் பின் நடிக்காமல் இருந்த அவர், நடப்பாண்டு வெளியான நானி தயாரித்த கோர்ட் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்த படத்தில் சிவாஜியின் வில்லத்தனமான நடிப்பு பேசுபொருளாக மாறியது. இப்போது அவர் நடிப்பில் தண்டோரா படம் வெளியாகவுள்ளது. இதன் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 23) நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பேசிய சிவாஜி,”எல்லா கதாநாயகிகளும் உடல் பாகங்களை வெளிப்படுத்தும் உடைகளை அணிய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து சேலை அல்லது உடலை முழுவதுமாக மறைக்கும் உடைகளை அணியுங்கள். அழகு என்பது முழுமையான உடையிலோ அல்லது சேலையிலோ உள்ளது. உடல் பாகங்களை வெளிக்காட்டுவதில் அல்ல" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேசாமல் இருக்கலாம், ஏனென்றால் அது உங்கள் சுதந்திரம் என்று அவர்கள் உணர்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்கள் அதை விரும்பாமல் இருக்கலாம். ஒரு பெண் இயற்கையைப் போன்றவள். இயற்கை அழகாக இருக்கும்போது, ​​நாம் அதை மதிக்கிறோம். ஒரு பெண் என் தாயைப் போன்றவள், நான் அவளை என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கிறேன்” என கூறினார். 

இதனையடுத்து புகழ்பெற்ற நடிகைகளான சாவித்ரி மற்றும் சௌந்தர்யா மற்றும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நேர்த்தியான உடை அணிவதை உதாரணமாகக் குறிப்பிட்ட சிவாஜி, அவர்கள் தங்கள் உடையின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் நான் அவர்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளனர் என சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் சுதந்திரம் விலைமதிப்பற்றது. எனவே அதை இழக்காதீர்கள். உங்கள் நடத்தையைப் பொறுத்து மக்கள் உங்களை மதிப்பார்கள். கவர்ச்சிக்கு வரம்புகள் இருக்க வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய பேச்சை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படியே எடுத்தாலும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அது எனக்கு பிரச்னை இல்லை” என நடிகர் சிவாஜி கூறியுள்ளார். 

இதனையடுத்து சிவாஜிக்கு பல பெண்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆடை சுதந்திரம் பற்றி கருத்து தெரிவிக்கவும் ஒரு அளவு உள்ளது. இதைப்பற்றி பேசும் சிவாஜி மட்டும் என கலாச்சார ஆடையா அணிந்திருந்தார். ஹூடி மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ளார். நம் கலாச்சாரப்படி வேட்டி அணிந்திருக்கலாம். நெற்றியில் பொட்டு வைத்திருக்க வேண்டும். திருமணமானவர் என்பதற்கு அடையாளமாக காலில் மெட்டி, கங்கணம்  எனப்படும் கையில் கட்டப்படும் மஞ்சள் சரடு அணிந்திருக்கலாமே என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget