திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பிரபல வில்லன் நடிகர்.. இதைப் படிங்க..
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடிகர் பதிபதி அஜய் கோஷ் காவி ஆடையுடன் சுவாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டார்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டத்தைச் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் சிவனே மலையாக காட்சியளிக்க கூடிய மலையை கிரிவலம் சுற்றி வருகின்றனர். தற்போது கடந்த சில மாதங்களாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.
இதனால் திருவண்ணாமலை மாநகராட்சி முழுவதும் எங்கு பார்த்தாலும் ஆந்திரா, தெலுங்கானா பகுதி கார்களாக கண்களில் தென்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது 24 மணி நேரமும் கிரிவலம் சுற்றி பக்தர்கள் வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் பதிபதி அஜய் கோஷ் கிரிவலம்
இதுமட்டும் இன்றி திரைத்துறையினர் தங்களது பட பூஜை மற்றும் எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதற்கு முன்பாகவும் வெளியிட்ட பிறகும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து கிரிவலம் வருவார்கள். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பதிபதி அஜய் கோஷ் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரை தரிசனம் செய்தார்.
பின்னர் அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள மலையின் 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டார். அஜய் கோஷ் தமிழில் முதல் படமான விசாரணை மற்றும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் ரங்கஸ்தலம், புஷ்பா, குண்டூர் காரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பதிபதி அஜய் கோஷ் நடித்துள்ளார்.
குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் சமீப காலமாக திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்களும் அதிக அளவு திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

