Idhayam Serial: சாரதாவை சந்தித்த பாரதி.. ஆதிக்கு ஷாக்.. இதயம் சீரியல் இன்று!
இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்டை தெரிஞ்சிக்கோங்க!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ஆதி பாரதியிடம் மன்னிப்பு கேட்டு தமிழுக்கு செயின் ஒன்றை பரிசாக கொடுத்ததை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, பிச்சைக்காரர்கள் சிலர் சாப்பிடுவதற்காக மண்டபத்திற்கு வர ,அறிவு “இன்னும் ரிசப்சனே முடியல.. அதுக்குள்ள எதுக்கு வந்தீங்க.. போங்க அப்புறமா வாங்க” என துரத்தி விடுகிறார்.
எல்லோரும் சென்றாலும் சாமியார் போல ஒருவர் அங்கே நின்று இருக்க, ஆதியின் அம்மா சாரதா “போங்க அப்புறமா வாங்க, இப்போ சாப்பாடு இல்லை” என்று சொல்ல, அவர் சாப்பிடுவதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.. முதல்ல இந்த கல்யாணம் நடக்குமானே தெரியல” என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
“உன் பிள்ளையோட வாழ்க்கையில ஒரு பொண்ணு இருக்கா” என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் ஆதியின் கையில் ஒரு தாயத்தை எடுத்து கட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். பிறகு சாரதா இதை எல்லாம் நினைத்துக் கொண்டே நடந்து வரும்போது மயக்கம் வந்து கீழே விழப்போக, பாரதி ஓடி வந்து தாங்கி பிடிக்கிறாள்.
“யாருமா நீங்க என்னாச்சு?” என்று கேட்க, சாரதா “நான் தான் ஆதியோட அம்மா” என்று சொல்ல “உங்களை எனக்கு முன்னாடியே தெரியும். உங்களுக்கு உடம்பு முடியாமல் போனப்ப நான் தான் சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்” என்று பாரதி சொல்ல, சாரதா “இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கமா” என்று கூறுகிறார்.
அடுத்து ஆதி மற்றும் கேசவன் இருவரும் ரூமில் இருக்கும்போது கேசவன் “நான் எம்டி இல்லன்னு எப்போ எல்லாருக்கும் தெரிய போகுதுன்னு தெரியல” என்று பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ கதவைத் தட்ட, கேசவன் கதவைத் திறக்க, பாரதி நிற்பதை பார்த்து இருவரும் ஷாக்காகின்றனர்.
பாரதி ஆதியிடம் உங்க அம்மாவை பார்த்ததாக சொல்ல, ஆதி விஷயம் ஏதாவது தெரிந்து விட்டதோ என பதறுகிறான். மறுபக்கம் அறிவு சாமியார் சொன்னதையும் பாரதி கல்யாணத்துக்கு வந்திருப்பதையும் நினைத்து ஏதோ தப்பா நடக்கப் போகிற மாதிரியே இருக்கு என சந்தேகப்படுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க