Ninaithen Vanthai : மனோகரி போடும் திட்டம்.. குழந்தைகளுக்கு வரும் ஆபத்து? - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்..
நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோட்டில், சுடர் சுவர் ஏறி குதித்துச் சென்று போஸ்ட் மேனிடம் லெட்டரை கேட்க, அவர் போலீசை கூப்பிடவா? என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சுடர் அந்த லெட்டரில் இருக்கும் நம்பருக்கு போன் பண்ணுங்க, என்று சொல்லி அது தனக்கு வந்த லெட்டர் தான் என்பதை நிரூபித்து போஸ்ட் மேனிடம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள். மறுபக்கம் மனோகரி எழில் சுடரை தூக்கிக் கொண்டு சென்ற காட்சியை நினைத்து நினைத்து பார்த்து கடுப்பாக டிவியில் மனநல ஆலோசனை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில் ஒருவன் மனோகரி மனதுக்குள் இருப்பதை கேள்வியாக கேட்க, ஆலோசகர் சொன்ன பதிலை கேட்டு கடுப்பாகி, டிவியை ஆப் செய்து விடுகிறாள். பிறகு சுடர் ஸ்கூலுக்கு வர அஞ்சலி சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்னாச்சு, என்று கேட்க இந்த சதாசிவன் என்னை அடிச்சுக்கிட்டே இருக்கான் என்று சொல்ல சுடர் அவனை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள்.
ALSO READ | Maha Shivaratri 2024: ஓம் நமசிவாய! மகா சிவராத்திரி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு தகவல்
பிறகு சுடர் ஒரு வேலை வீட்டு மாஸ்டராக இருக்குமோ என்று தயக்கம் கொள்ள அஞ்சலி அவன் தான் சதாசிவன் என்று ஒரு குட்டி பையனை கைகாட்ட சுடர் அவனை அஞ்சலியுடன் சேர்த்து வைக்க இருவரும் ஃபிரண்டாகின்றனர். பிறகு அஞ்சலி நீ உண்மையாகவே ரவுடிதான் இனிமே நாம சீக்ரெட் பிரண்டா இருக்கலாம், என்று சுடருடன் பிரெண்ட் ஆகிறாள்.
அதைத்தொடர்ந்து இருவரும் பாஸ்போர்ட் ஏஜென்சி ஆபீஸ் வர சீக்கிரமா பணத்தை கட்ட சொல்லி சொல்லி அனுப்புகின்றனர். சுடரும் அஞ்சலியும் நடந்து வருவதை எதிரே காரில் வரும் மனோகரியும் செல்வியும் பார்த்து விடுகின்றனர்.
குழந்தைகளுக்கு ஒரு சின்னதா ஆக்சிடென்ட் நடந்ததால், அதை வச்சு சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்திடலாம் என்று முடிவெடுத்து மனோகரி ரவுடியை ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய, நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க