Varisu: இனி தினசரி வாரிசு பாக்கலாம்..! எப்படி? எத்தனை மணிக்கு?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சீரியலாக வாரிசு என்ற சீரியல் நாளை முதல் ஒளிபரப்பப்பட உள்ளது.

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையில் அதிகளவு ரசிகர்களை கொண்ட தொலைக்காட்சியில் ஜீ தமிழ் முக்கியமான தொலைக்காட்சி ஆகும்.
வாரிசு சீரியல்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அயலி என்ற சீரியல் சமீபத்தில் ஒளிபரப்பாகியது. இந்த நிலையில், அடுத்ததாக வாரிசு என்ற புத்தம் புதிய சீரியல் ஜீ தமிழ் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியல் நாளை முதல் (ஜூன் 30-ம் தேதி) ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. நாள்தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வாரிசு சீரியல் காரணமாக மௌனம் பேசியதே சீரியல் இனி நாள்தோறும் 3 மணி முதல் 3.30 மணி வரை மாற்றி ஒளிபரப்பாக உள்ளது.
வழிநடத்தப்போவது யார்?
நாயகனின் பாட்டி தனது திறமையாலும் தியாகத்தாலும் கட்டி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை, தனது பேரன் அக்கறையில்லாமல் இருப்பதால் தன் சாம்ராஜ்யத்தை அடுத்ததாக சரியாக வழிநடத்திக் கொண்டு செல்லப் போவது யார்? என தவிக்கிறார்.
இந்த சமயத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாயகி தமிழுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக அவரது அப்பா தலைமறைவாகி விட இந்த கல்யாணம் நின்று போகின்றது. இதனால் தமிழ் தனது குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் தாங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
சிபி - தமிழ் ஜோடி சேருவது எப்படி?
இப்படியான சூழலில் ஹீரோ சிபி உடன் தமிழ் எப்படி ஜோடி சேருகிறாள்? பாட்டி சாம்ராஜ்யத்தை வழி நடத்த வந்த தமிழ் குடும்பத்தையும் ஒன்றிணைத்து செய்வாளா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க இதே ஜூன் 30 தான் தேதியில் இருந்து இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் மீண்டும் 10:00 மணி வரை ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது.





















