Meenakshi Ponnunga: வெற்றி கல்யாணத்தில் நண்பர்கள் செய்த சதி .. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட் இதோ..!
மீனாட்சி பொண்ணுங்க எபிசோடில் சக்தியுடன் தனக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் சங்கிலி இருக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
மீனாட்சி பொண்ணுங்க எபிசோடில் சக்தியுடன் தனக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் சங்கிலி இருக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
இதுவரை நடந்தது என்ன?
நேற்றைய எபிசோடில் மீனாட்சி எவ்வளவோ சொல்லியும், யமுனாவை காரணம் காட்டி சங்கிலியை திருமணம் செய்வதில் சக்தி உறுதியாக இருக்கிறாள்.அப்போது வீட்டில் வேறு புடவை இல்லாததால் ரங்கநாயகி கொடுத்த புடவையை சக்தி அணிந்து திருமணம் நடக்கும் இடத்திற்கு சக்தி குடும்பத்துடன் வருகிறாள். ஆனால் அவளிடம் யாரும் பேசாமல் இருக்கிறார்கள். மேலும் புடவை மாறியிருப்பதை பார்த்ததும் சங்கிலி டென்ஷனாகிறான். இதுகுறித்து புஷ்பாவிடம் சொல்ல, அவர் என்னவென்று விசாரிக்கலாம் அமைதியாக இருக்குமாறு சொல்கிறாள். இதனையடுத்து கோயிலின் வெளியே மீனாட்சி ஒரு ஓரமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்.
சக்தி திருமணம் நடக்குமா?
இன்றைய எபிசோடில் மீனாட்சி சக்தி சங்கிலி கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் கோவிலில் வெளியே சென்று அமர்ந்து கொள்கிறாள்.மறுபக்கம் வெற்றியும் பூஜாவும் மண்டபத்தில் கல்யாணத்துக்கு தயாராகிறார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று சரளா பூஜாவிடம் சொல்கிறாள்.
இதற்கிடையில் மீனாட்சி கடைசியாக சக்தியிடம் ஒரு தடவை பேசி பார்க்கலாம் என முடிவு செய்து நிலைமையை கூறுகிறார். ஆனால் சக்தி தன் முடிவில் மாற்றமில்லை என்று சொல்லி விடுகிறாள். இந்த பக்கம் சங்கிலி கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் இருக்கிறான்.
மேலும் புஷ்பா இன்னும் இரண்டு மணி நேரம் எப்படியாவது தாக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் மீனாட்சி சாமி தன் முன் வருவாள் என்று பார்த்திருக்கிறாள். மண்டபத்தில் திடியன், கிரி இருவரும் பிளான் செய்து வெற்றியின் வஸ்திரத்தை ஹோமக் குண்டத்தில் நெருப்பில் எரித்து விட ஐயர் அபசகுணம் என்று சொல்கிறார். இதனால் பூஜா டென்ஷனாகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.