(Source: Poll of Polls)
Karthigai Deepam: கார்த்தியிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்த கதிர்...கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
நேற்றைய எபிசோடில் கதிர் நட்சத்திராவை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் நட்சத்திரா கார்த்தியை கல்யாணம் பண்ணிட்டு சொத்தை அடையானும் என கல்யாணத்துக்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்புகிறாள்.
இதனால் கோபமடையும் கதிர் இதை இப்படியே விட கூடாதுனு முடிவெடுத்து கார்த்தியிடம் எல்லா விஷயத்தை சொல்ல போவதாக தனது நண்பனிடம் சொல்லி விட்டு கார்த்திக்கு போன் செய்து உங்களிடம் தீபாவின் உண்மையாக குணம் பற்றிய விஷயங்களை சொல்ல வேண்டும் என்று சொல்லி ஓரிடத்துக்கு வர சொல்கிறான். கார்த்தி தீபாவுக்கு போன் செய்து இந்த விஷயத்தை சொல்லி விட்டு கதிரை பார்க்க கிளம்புகிறான், தீபாவும் அந்த இடத்திற்கு ஒரு ஆட்டோவில் கிளம்பி செல்கிறாள்.
கதிரின் நண்பன் மூலமாக நட்சத்திராவுக்கு கதிர் கார்த்தி சந்திப்பு குறித்த விஷயம் தெரிய வர அவள் கதிரை கொல்ல இரண்டு ஆட்களை அனுப்பி வைக்கிறாள். கதிர், கார்த்தி ஒருபுறம் வேகமாகமாக வந்துகொண்டிருக்க நட்சத்திரா அனுப்பிய ஆட்களால் கதிருக்கு விபத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான், அந்த வழியாக ஆட்டோவில் வரும் தீபா அவனை பார்த்து ஹாஸ்பிடல்க்கு அழைத்து செல்கிறாள். அவனுக்காக ரத்தம் கொடுக்க இதையெல்லாம் பார்த்த கதிர் வருத்தம் அடைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க: விஜய், அஜித்துக்கு பதிலடியா? .. பரபரப்பை கிளப்பும் ஜெயிலர் பாடல் வரிகள்.. ரசிகர்களிடையே கருத்து மோதல்..