மேலும் அறிய

Hukum Song: விஜய், அஜித்துக்கு பதிலடியா? .. பரபரப்பை கிளப்பும் ஜெயிலர் பாடல் வரிகள்.. ரசிகர்களிடையே கருத்து மோதல்..

ஜெயிலர் படத்தில் இருந்து ஹூக்கும் பாடல் வரிகள் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியாகி வருகின்றது. 

ஜெயிலர் படத்தில் இருந்து ஹூக்கும் பாடல் வரிகள் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியாகி வருகின்றது. 

ஜெயிலர் படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “ஜெயிலர்”. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு ஜூன் இறுதியில் முடிவுக்கு வந்தது. இந்த படத்தில் ரஜினி ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதன் அறிமுகம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியானது.
இதனிடையே ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரவுள்ளது. கடந்த ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியானது.பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். இப்பாடல் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

ஹூக்கும் பாடல்

இதனிடையே  ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக ‘ஹூக்கும்’  இன்று வெளியாகியுள்ளது.  சூப்பர் சுப்பு எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த பாடலின் தொடக்கத்தில் ரஜினியின் வாய்ஸில் பன்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் தியேட்டர் தெறிக்கும் அளவுக்கு பாடலின் வரிகள் எழுதப்பட்டுள்ளது. நாடி நரம்பில் இரத்தம் போல ஊறிப்போன ரஜினி ரசிகராக இருக்கும் நபர் அவரின் வளர்ச்சியை அழகாக வர்ணிக்கும்படியான வரிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாடல் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 

விஜய் - அஜித் விமர்சிக்கப்பட்டனரா?

இந்த பாடலில், “உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு” என எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் கோலிவுட் வட்டாரத்தில் பலரும், ரசிகர்களும்  கூறி வருகின்றனர். இதில் வரும் பட்டத்த பறிக்க நூறு பேரு வரி விஜய்யை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதாக பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..! என்னும் வரியில் அஜித்தை விமர்சித்துள்ளதாக ஒரு பக்கம் கமெண்டுகள் பறக்கின்றது. எது எப்படியோ ஆக மொத்தம் ரஜினி ரசிகர்களுக்கு இந்த பாடல் டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget