Karthigai Deepam: ராஜராஜனைத் தேடும் கார்த்தி! சடங்குகள் செய்யப்போவது யார்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் துரையால் ராஜராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ராஜராஜனைத் தேடும் கார்த்தி:
அதாவது, ராஜராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இன்னொரு பக்கம் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் தொடங்கி நடக்கிறது. அப்போது பூஜையில் ராஜராஜன் சில சடங்குகளை செய்ய வேண்டும் என அவரை அழைக்கின்றனர்.
ராஜராஜன் எங்கும் இல்லாத நிலையில் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில் இன்ஸ்பெக்டர் துரை ராஜராஜனிடம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அவர் தான் ஜீப்பில் அழைத்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கு இடையில் என்னமோ நடந்திருக்கு என்று சந்தேகம் உருவாகிறது.
மீண்டும் வந்த ராஜராஜன்:
அதை தொடர்ந்து பூஜை குறித்து சாமியாரிடம் அருள்வாக்கு கேட்க அவர் ராஜராஜனுக்கு பதிலாக கார்த்தியே இந்த சடங்குகளை செய்யலாம் என்று சொல்கிறார். பிறகு கார்த்தியை பூஜையில் உட்கார வைக்க போகும் சமயத்தில் ராஜராஜனை அழைத்து வந்து விடுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















