Karthigai Deepam: சந்திரகலாவிற்கு பளார் விட்ட ரேவதி.. கார்த்திகை தீபத்தில் இன்று
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வருமான வரித் துறையினர் சாமுண்டீஸ்வரி வீட்டில் சோதனையிட தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை உடைத்த கார்த்திக்:
அதாவது, சோதனையிட்ட அதிகாரிகள் பணம் எதுவும் சிக்காத காரணத்தினால் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல, அப்படின்னா அந்த பணம் எப்படி வந்துச்சுன்னு கேளுங்க? என்று சந்திரகலா கார்த்தியை கோர்த்து விடுகிறாள்.
இதைத்தொடர்ந்து அந்த பணம் சந்திரகலாவின் மூலமாகத்தான் இந்த வீட்டிற்குள் வந்தது என்ற உண்மையை கார்த்திக் உடைக்க, கடைசியில் சந்திரகலாவிற்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சிவனாண்டிக்கு மட்டுமே பங்கு இருப்பதாக நம்ப வைத்து விடுகின்றனர்.
சந்திகரலாவிற்கு பளார்:
அதைத் தொடர்ந்து போகி பண்டிகை கொண்டாட, சந்திரகலா ரேவதி கார்த்தி கல்யாண போட்டோவை கொண்டு போய் எரித்து விட ரேவதி சந்திரகலாவை பளார் என அறைந்து அந்த போட்டோவை தீயிலிருந்து எடுக்கிறாள். சாமுண்டீஸ்வரி ரேவதியை மன்னிப்பு கேட்க சொல்ல ரேவதி மன்னிப்பு கேட்க முடியாது என மறுக்க கார்த்திக் அங்கு வந்து ரேவதியை மன்னிப்பு கேட்க வைக்கிறான்.
பிறகு போட்டோ எரிந்த சோகத்தில் இருக்கும் ரேவதியை சந்திக்கும் கார்த்திக் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















