Karthigai Deepam: மருமகனை விரட்டிய மாமியார்.. சாமுண்டீஸ்வரியிடம் சத்தம் போட்ட பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மருமகனை விரட்டிய மாமியார்:
அதாவது, சாமுண்டீஸ்வரி கார்த்தியுடன் கிளம்பிய ரேவதியால் அதிர்ச்சியாகி துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொள்வேன் என்று மிரட்டி தடுத்து நிறுத்துகிறாள். அதோடு கார்த்தி பயன்படுத்திய துணி மற்றும் காரை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள்.
சந்திரகலா கார்த்தியை சந்தித்து ஜெயித்த கர்வத்தில் பேச இன்னும் ஒரே மாசத்தில் இந்த வீட்டிற்குள் திரும்ப வருவேன் என்று சவால் விடுகிறான். அடுத்து வீட்டிற்கு வந்த கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்ததை சொல்ல பாட்டி வருத்தப்பட கார்த்திக், நவீன் மற்றும் துர்கா ஆகியோர் சமாதானம் சொல்கின்றனர்.
சாமுண்டீஸ்வரியிடம் சத்தம் போட்ட பரமேஸ்வரி:
அந்த சாமுண்டீஸ்வரியை இப்படியே விட கூடாது என முடிவெடுக்கும் பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து சத்தம் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















