Karthigai Deepam: கும்பாபிஷேகத்திற்கு வரும் சாமுண்டீஸ்வரி.. வெடிகுண்டு வைக்கப்போகும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி கும்பாபிஷேகத்திற்கு வந்த நிலையில், இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் காளியம்மா ரகசியமாக தனது திட்டத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கும்பாபிஷேகத்திற்கு வந்த சாமுண்டீஸ்வரி:
அதாவது, கோயிலில் கும்பாபிஷேகம் வேலைகள் நல்லபடியாக நடக்க காளியம்மா திட்டத்தை கேட்டது சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் நல்ல திட்டம் என சொல்கிறார்கள்.
இதையடுத்து இங்கே கோவில் கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரி காரில் வந்து இறங்க எல்லோருக்காகவும் வந்திருக்கிறேன். இந்த குடும்பத்தில் ஒருத்தரா வரல என்று சொல்கிறாள்.
மயில்வாகனம் கார்த்தியிடம் காளியம்மாள் என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க நாம கொஞ்சம் உஷாரா இருக்கணும். நீ அத்தை கிட்ட உண்மைய சொல்ல போறது தான் ஒரு மாதிரி இருக்கு. அத்தை என்ன சொல்ல போறாங்கனு தெரியல என்று சொல்கிறான்.
வீட்டிற்கு வெடிகுண்டு:
இதையடுத்து பாட்டி ஒருவர் கார்த்தியை சந்தித்து நீ தான் ராஜா சேதுபதியோட பேரனா? நான் கண் மூட்றதுக்குள்ள இந்த கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்துடணும்னு ஆசைப்பட்டேன் அது உன்னால நடக்க போகுது என சொல்கிறார். மறுபக்கம் காளியம்மா வெடிகுண்டு வைப்பவனை வீட்டிற்கு அழைத்து தனது திட்டத்தை சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















