Karthigai Deepam: ரேவதியை உயிருடன் எரிக்க சதி.. கண்டுபிடிப்பானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்..திக்..!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரேவதியை கடத்தி, கார்த்தியை பழி தீர்க்க திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கடத்தப்பட்ட ரேவதி:
அதாவது, முத்துப்பாண்டியின் மனைவி இதெல்லாம் வேண்டாம் என தடுக்க முயற்சி செய்ய, முத்துப்பாண்டி அவளை ரூமுக்குள் அடைத்து வைக்கிறான்.
இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டியன் ஆட்கள் கோவிலில் வைத்து ரேவதியை மயங்க வைத்து கடத்தி விடுகின்றனர். பிறகு ரேவதி காணாமல் போன விஷயம் அறிந்து கார்த்திக் அவளை தேடத் தொடங்குகிறான்.
ரேவதியை கொளுத்த திட்டம்:
ரேவதியின் தோழியும், அவளது கணவன் சரவணனும் இது கண்டிப்பா முத்துப்பாண்டி வேலையா தான் இருக்கும் என்று சந்தேகப்படுகின்றனர். இதனால் கார்த்திக் இந்த விஷயத்தை நாமளே பாத்துக்கலாம் ஊர்காரர்கள் எதுவும் இதில் தலையிட வேண்டாம் என முடிவெடுக்கிறான்.
கடத்தப்பட்ட ரேவதியை ஊருக்கு நடுவில் கோவில் திருவிழாவில் போது, கொளுத்த ஏற்பாடு செய்திருக்கும் சொக்க பானைக்குள் மறைத்து வைக்கின்றனர். அந்த வழியாக வந்த ஊர்க்காரர்கள் என்ன பண்றீங்க? என்று கேட்க சமாளித்து இங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















