Karthigai Deepam: அம்பலமான மாயா - மகேஷ் கள்ளத்தொடர்பு! ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் மாயா - மகேஷ் இடையேயான கள்ளத்தொடர்பு விவகாரம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வந்ததையடுத்து இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து பேசியதை பார்த்து சாமுண்டீஸ்வரி கோபமான நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மீண்டும் கண்பார்வை கிடைத்த மல்லிகா:
அதாவது, சாமுண்டீஸ்வரி ரேவதியை வீட்டிற்கு அழைத்து வந்து கோபப்படுகிறாள், அம்மாவுடன் சேர்ந்து ரோகிணியும் ரேவதியை திட்ட கடைசி பெண் சுவாதி மட்டும் என்னையும் கூப்பிட்டு இருந்தா நானும் பாட்டியை பார்க்க வந்திருப்பேன் என்று ஆறுதல் சொல்கிறாள்.
அதனை தொடர்ந்து டாக்டர் மல்லிகாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு கடந்த 1 மாதமாக கட்டு போட்டு இருந்த நிலையில் தற்போது டாக்டர் ஒருவர் வீட்டிற்கு வந்து மல்லிகாவின் கட்டை எ அவிழ்க்க மல்லிகா டாக்டர் மீண்டும் பார்க்க தொடங்குகிறார்.
மாயா - மகேஷ் கள்ளத்தொடர்பு:
மகேஷ் மற்றும் மாயா தெரிந்தவர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்து கொண்டிருக்க அதே கோவிலுக்கு மல்லிகா டாக்டரும் வருகிறார். மகேஷ், ரேவதி கல்யாணம் குறித்து அறியும் மல்லிகா டாக்டர் அதிர்ச்சி ஆகிறார்.
உடனே சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு வர சொல்லி மாயா - மகேஷ் கள்ளத்தொடர்பு குறித்தும் செய்த விஷயத்தையும் போட்டு உடைக்க சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். உடனே துப்பாக்கியை கையில் எடுத்து சாமுண்டேஸ்வரி நேராக மாயா வீட்டிற்கு வருகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.





















