Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை.. கடுப்பில் சிவனாண்டி - கார்த்திகை தீபத்தில் இன்று
கட்டாயத்தின் காரணமாக நிலத்தை சாமுண்டீஸ்வரி எழுதி கொடுத்த நிலையில், சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை தர ஊர்க்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
சாமுண்டீஸ்வரியை தடுத்த ஊர் பெரியவர்கள்:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நிலத்தில் சாமி சிலை கிடைக்க அது நல்ல இடம் தான் என்று கார்த்தி அனைவரையும் நம்ப வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஊர் காரர்கள் சாமுண்டீஸ்வரியை கையெழுத்து போட சொல்லி கேட்க அவளும் ராஜராஜனும் கையெழுத்து போடுகின்றனர். பிறகு சாமுண்டீஸ்வரி கிளம்ப தயாராக ஊர் பெரியவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர்.
சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை:
பரமேஸ்வரி பாட்டியுடன் சேர்ந்து நீங்களும் உங்க கணவரும் இணைந்து டாகுமெண்ட்டை கொடுங்க, கோவில் திருவிழாவில் உங்களுக்கு முதல் மரியாதையும் கொடுக்கிறோம் என்று சொல்லி சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைக்க வில்லன்கள் டீம் வெறுப்பாகின்றனர்.
தொடர்ந்து இளையராஜா வேலை செய்யும் ஹோட்டலுக்கு தீபாவதி வருகிறாள், இளையராஜா நீண்ட நாட்களாக இங்கு வேலை செய்பவன் என்பதை அறிந்து கொள்கிறாள். அவள் கொண்டு வந்த பைலை மறந்து விட்டு செல்ல அதில் கார்த்தியின் போட்டோ இருக்க அதனை பார்த்து இளையராஜா டென்ஷனும் குழப்பமும் அடைகிறான்.
ஷாக் ஆகிய கார்த்திக்:
தீபாவதியிடம் நீங்க நல்லா பேசுறீங்க என்று சொல்லி ஒரு செல்பியை எடுத்து அதை கார்த்திக்கு அனுப்பி வைக்கிறான், கார்த்திக் அருணுக்கு போன் செய்து ஒரு லேடி வந்து போன் சிசிடிவி ஆதாரங்களை கேட்கிறான். பிறகு இரண்டும் ஒரே லேடி தான் என அறிந்து ஷாக் ஆகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















