Ayali Serial: கல்யாணமே வேண்டாம் என்ற அயலி.. விடாமல் டார்ச்சர் செய்த ரித்விகா - அயலி சீரியலில் இன்று
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அயலி சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீட்டுக்கு வந்த அயலியை எல்லோரும் டார்ச்சர் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கல்யாணமே வேண்டாம்:
அதாவது, அயலி ஒரு கட்டத்தில் எனக்கு கல்யாணமே வேண்டாம், ரித்விகாவுக்கு கல்யாணம் பண்ணுங்க என்று சொல்கிறாள். இதைத்தொடர்ந்து இங்கே இந்திராணி கபிலனை கூப்பிட்டு அக்கவுண்டில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணம் எடுத்தியா என்று கேட்க, ஆமா அக்கா பிரண்டுக்கு எமர்ஜென்சி அதனால எடுத்தேன் என்று சொல்ல இந்திராணி உன் பிரண்டுக்கு போன போடு என்று சொல்கிறாள். இதனால் கபிலன் பயந்து போய் போன் போட போன் ஸ்விட்ச் ஆப் என வருகிறது.
அதன் பிறகு வர்மா, கபிலனுக்கு போன் போட்டு கேட்ட பணம் என்ன ஆச்சு? எனக்கு உடனடியா பணம் வேண்டும் ஏற்பாடு பண்ணு என்று சொல்கிறான். மறுபக்கம் அயலி மற்றும் சிவா ஐஸ்கிரீம் பார்லரில் இருக்கும்போது, அப்போது கபிலன் அயலி வாங்க சீனியர் போலாம் என்று அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.
அயலியை டார்ச்சர் செய்யும் ரித்விகா:
பிறகு அயலி வீட்டுக்கு வந்ததும் ரித்விகா அவளை வேலை வாங்கி டார்ச்சர் செய்கிறாள். இந்த சமயத்தில் ரித்விகாவுக்கு போன் கால் வர போனை எடு என்று சொல்ல அங்கிருந்து அமிர்தா அக்காவை எதற்கு வேலை வாங்குற என்று கேட்க ரித்விகா உன் வேலையை மட்டும் பாரு என்று சொல்கிறாள்.
பிறகு ரித்விகா போனை அட்டென்ட் செய்ய, கபிலன் ஹாய் கண்ணு குட்டி என்று பேச இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று அயலி அதிர்ச்சி அடைகிறாள். பேசிவிட்டு போனை வைத்ததும் அயலி யாரது என்று கேட்க, ரித்விகா அல்டிமேட் ஸ்டார் அஜித் என்று சொல்லி அவளை கலாய்க்கிறாள். மேலும் யாரா இருந்தா உனக்கு என்ன என்று கோபப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















