(Source: ECI/ABP News/ABP Majha)
Anna Serial: சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. பரணி கொடுத்த ஷாக் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் இதோ..!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் பரணி கார்த்திக்கிடம் தனது தாலியை எடுத்து காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் தனது கல்யாணம் ஆன விஷயங்களை சொல்ல பரணி அதை கேட்டு என்னால் கார்த்தியின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என சந்தோசப்படுகிறாள், அதனை தொடர்ந்து அவன் ஷண்முகம் குறித்து பேச வர அங்கு வரும் சௌந்தரபாண்டி கார்த்தியை பேச விடாமல் தடுத்து தரதரவென இழுத்து சென்று விடுகிறான்.
இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி தெரிந்தோ தெரியாமலோ என் மருமகன் பரணி கழுத்தில் தாலி கட்டிட்டான், இப்போ தான் அவங்களுக்கு இடையே அன்னோன்யன் உருவாகிறது, இந்த நேரத்தில் உன்னுடைய விஷயங்களை சொல்லி அதை கெடுத்து விட வேண்டாம். பரணியுடன் உனக்கு எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று சொல்ல கார்த்தியும் உண்மை என நம்பி இனிமே ஷண்முகம், பரணியை தொடர்பு கொள்ளவே மாட்டேன் என்று கிளம்பி செல்கிறான்.
அடுத்ததாக வீட்டிற்கு வந்த பரணி கார்த்தியை பார்த்த மகிழ்ச்சியில் இருக்க இனிமே ஷண்முகத்துடன் சந்தோசமாக இருப்பா என்று நினைக்க இன்னும் 95 நாள் தான் அதுக்கப்புறம் கிளம்பிட்டே இருப்பேன் என ஷாக் கொடுக்கிறாள். ஷண்முகம் அவ எனக்கு பொண்டாட்டியா இருக்கனும்னு நான் ஆசைப்படல, 100 நாள் இந்த வீட்டில் சந்தோசமாக இருந்தால் போதும் என ஷண்முகம் சொல்கிறான்.
மறுநாள் காலையில் ஷண்முகம் கேரளா செல்வதாக சொல்ல வைகுண்டம் சூடாமணியை பார்க்க தான் போகிறான் என அவனை பின்தொடர்ந்து செல்ல முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.