Amudhavum Annalakshmiyum: வடிவேலுவால் வந்த சிக்கல்.. தீர்க்க முயற்சி செய்யும் அமுதா.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் தன்னுடைய கடை கடன்காரரின் பிடியில் சிக்கியதை எண்ணி அன்னலட்சுமி வருத்தப்படும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
இன்றைய எபிசோடில் அமுதா, அன்னலட்சுமியும் மார்கெட்டுக்கு போய் விட்டு வரும் வழியில் ஏதாவது கூல்டிரிங்ஸ் குடிக்கலாம் என நினைத்து வடிவேலு கடைக்கு வரும் நிலையில், அங்கு கடை பூட்டியிருக்கிறது. இதனால் பக்கத்து கடைக்காரரிடம் விவரம் கேட்க, ஒரு வாரமா கடை திறக்கவில்லை என சொல்கின்றனர். இதனால் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
View this post on Instagram
உடனே அன்னலட்சுமி வடிவேலுக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என கேட்க, தான் கடையில் இருப்பதாக வடிவேலு பொய் சொல்கிறான். இதனால் அன்னலட்சுமி கோபமடைகிறாள். வீட்டுக்கு வந்ததும் அன்னலட்சுமி வடிவேலுவை அடிக்கப் போகிறார். வடிவேலு கடை கடனில் இருப்பதால் கடன்காரங்க கடையை மூடி சாவியை எடுத்துட்டு போயிட்டாங்க என சொல்கிறான்.
இதனால் வருத்தப்படும் அன்னலட்சுமி அமுதாவிடம், என் கணவர் போனதுக்கப்புறம் பிழைக்க வழி தெரியாம நானும் என் தம்பி மாணிக்கமும் கஷ்டப்பட்டு இந்த கடையை உருவாக்குனோம். இவன் பெரியவனாக ஆன பிறகு கடையை பார்த்துக்கிட சொல்லி கொடுத்தேன்.. செந்தில் வாத்தியார் ஆயிட்டான், இவனுக்கு ஏதாவது பண்ணனுமேன்னு இதை பண்ணுனேன். என் உயிருக்கு மேலா நினைச்ச இந்த கடையை இவன் ஒண்ணுமில்லாம பண்ணிட்டான். அவனும் பொய்யை சொல்லி என்னை ஏமாத்திட்டான் என வருத்தப்படுகிறார்.
இதனையடுத்து அமுதா வடிவேலுவிடம் கடையை பூட்டிட்டு போனது யாரு என கேட்க, வடிவேலு குமரேசன் என சொல்கிறான்.உடனே அமுதாவும், அன்னலட்சுமியும் கடை குறித்து குமரேசனிடம் உதவி கேட்க வருகின்றனர். ஆனால் குமரேசன் கல்யாணத்து முன்பு வரை தான் கணக்கு வழக்கு பார்த்து வந்ததாகவும், தன்னுடைய மருமகள் வந்த பிறகு, அவதான் எங்க வீட்டுல எல்லாத்தையும் பார்த்துக்குறா என சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து மருமகள் உமா கணக்கு நோட்டை எடுத்து வந்து, பத்து லட்சம் பாக்கி இருக்கு.. பணத்தை கொடுத்து விட்டு கடை சாவியை வாங்கிக் கொள்ள சொல்கிறாள். இந்த பக்கம் செந்தில் காலேஜூக்கு கிளம்பாமல் இருக்கிறான். அவனை அமுதா வந்து காலேஜூக்கு போகச் சொல்லி சண்டையிடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.