மேலும் அறிய

VJ Chitra: முல்லையாக நடித்து இதயங்களை அள்ளிய சித்து.. விஜே சித்ராவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்!

VJ Chitra: என்றுமே கலகலப்பாகவும் தன்னைச்சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் ஒரு நபராக இருந்த விஜே சித்ராவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. 

சில மரணங்கள் மிக மோசமான ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அப்படி ஒரு இழப்பு தான் “சிட்டாய் மேலே உயரப் பறந்த சித்து” என செல்லமாக அழைக்கப்பட்ட விஜே சித்ராவின் திடீர் மரணம்! ஏராளமான போராட்டங்கள், ஏமாற்றங்களை சந்தித்து ஒரு கட்டத்தில் வெற்றியின் விளிம்பில் ஊஞ்சலாடி, பின் நொடிப்பொழுதில் திடீரென காணாமல் போனவர் விஜே சித்ரா. அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. 

VJ Chitra: முல்லையாக நடித்து இதயங்களை அள்ளிய சித்து.. விஜே சித்ராவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்!

தொடங்கிய பயணம் :

மக்கள் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளினியாக பிரபலமடைந்த சித்ராவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் நடிகையாக அறிமுகமான சித்ரா, அதைத் தொடர்ந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா,  டார்லிங் டார்லிங், வேலுநாச்சி உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்து வந்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீ டான்ஸ் லீக் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது நடனத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரமாக பிரபலமான சித்ராவை, அனைவரும் முல்லை என்றே செல்லமாக அழைத்து வந்தனர். கடைசியில் முல்லையாகவே அவர் மரணித்தது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வெள்ளித்திரை அறிமுகம் :

தொகுப்பாளினியாக, சின்னத்திரை நடிகையாக ஜொலித்த சித்ரா வெள்ளித்திரையில் 'கால்ஸ்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அப்படம் வெளியாவதற்கு முன்னரே சித்ரா தனது முடிவை தேடிக்கொண்டது படம் வெளியான அன்றைய தினத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

VJ Chitra: முல்லையாக நடித்து இதயங்களை அள்ளிய சித்து.. விஜே சித்ராவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்!

தற்கொலையின் பின்னணி :

திருமண ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்ற வேளையில் திடீரென ஒரு நாள் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அவரின் தற்கொலையின் பின்னணியில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. இதுவரையில் தற்கொலைக்கான காரணம் பிடிபடாமல் உள்ளது அவரின் ரசிகர்கள் பலருக்கும் வேதனையைக் கொடுத்து வருகிறது. 

கலகலப்பான சித்து :

சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஒரு பர்சனாலிடியாக வலம் வந்த சித்ரா, தனது ரசிகர்களுடன் என்றுமே தொடர்பில் இருந்து வந்தார். என்றுமே கலகலப்பாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் ஒரு நபராக இருந்தவர். மிகவும் துணிச்சலான ஒரு பெண்மணியாக இருந்து வந்த சித்ரா எதற்காக இப்படி ஒரு அவசர முடிவை எடுக்க வேண்டும் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

VJ Chitra: முல்லையாக நடித்து இதயங்களை அள்ளிய சித்து.. விஜே சித்ராவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்!

ரசிகர்கள் வருத்தம் :

இன்றும் அவரின் இழப்பை அவரின் ரசிகர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் நினைவுகள் ரசிகர்கள் நெஞ்சங்களில் கலையாமல் அப்படியே உள்ளது. இன்றும் சித்ராவின் நினைவாக அவரின் பிறந்தநாள், நினைவு நாள் அன்று போஸ்டர்களை ஒட்டி நினைவு கூர்ந்து வருகிறார்கள் சித்ராவின் ரசிகர்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Iran on Hormuz: நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Iran on Hormuz: நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
School Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
Maruti Suzuki Victoris: மாருதியின் பாதுகாப்பான கார்..! 26KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், குடும்பங்களுக்கான பட்ஜெட்
மாருதியின் பாதுகாப்பான கார்..! 26KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், குடும்பங்களுக்கான பட்ஜெட்
நீங்க இருங்க முதல்வரே.. நாங்க பேசிக்குறோம்.. திமுகவை எதிர்க்கும் காங்கிரஸ்.. சரமாரி பதிலடி!
நீங்க இருங்க முதல்வரே.. நாங்க பேசிக்குறோம்.. திமுகவை எதிர்க்கும் காங்கிரஸ்.. சரமாரி பதிலடி!
Embed widget