மேலும் அறிய

ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?

'எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி, வேலுமணி மீது நம்பிக்கையின்மையில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளனர். அதோடு, த.வெ.க.வில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிடவுள்ளனர்’

அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் திடீரென ராஜினாமா செய்துவிட்டு, அப்படியே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுராந்தகம் அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய மூன்று பேரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், அணி மாறியதுடன் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த இந்த மூன்று எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 25 பேரையும் தகுதி நீக்க செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை துறந்து த.வெ.க.வில் ஐக்கியமாகியிருக்கிறார்கள் இந்த மூன்று பேரும்.

செங்கோட்டையன் ஆலோசனை

தாராபுரம் எம்.எல்.ஏ ஜெயகுமாரும், பெருந்துறை எம்.எல்.ஏ சத்தியபாமாவும் அதிமுகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய த.வெ.க அமைச்சருமான செங்கோட்டையனிடம் தங்களது எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து வருமா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் நிச்சயம் ஆபத்து வரும் என்றும் அதற்கு மாற்றாக மீண்டும் பதவியை பெற ஒரு வழி இருக்கிறது என்று கூறி இவர்கள் இருவரையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கிறார். கோவை மருத்துவமனையில் படுத்துக்கொண்டே இந்த திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அதோடு, மரகதம் குமரவேலும் சேர இந்த மூவரும் இறுதியாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். அதோடு, இந்த தொகுதிகளுக்கு வரும் இடைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் நீங்களே போட்டியிடலாம் என்ற உறுதியும் கொடுக்கப்பட்டிருப்பதால், அந்த பெரும் நம்பிக்கையோடு தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ; வேலுமணி மீது நம்பிக்கையில்லை

அதே நேரத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தியில் இருந்தவர்கள் வேலுமணி தங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்பி அவர் அணிக்கு தாவினர். ஆனால், அவரும் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து சறுக்கி வரும் நிலையிலும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தீவிரமாக களமாட முடியாத சூழல் அவருக்கு உருவாகியிருப்பதாலும் அவர் மீதான நம்பிக்கையை இந்த மூன்று எம்.எல்.ஏக்களுகளும் இழந்திருக்கின்றனர்.

ஆதவ் அர்ஜூனா போட்டுக் கொடுத்த திட்டம்

இந்நிலையில்தான் செங்கோட்டையன் வழிகாட்டுதல்படி ஆதவ் அர்ஜூனா இந்த மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆதவ் அர்ஜூனாவின் நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி மூவரும் சபாநாயகர் அறைக்கு சென்று ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறைக்கு வந்து த.வெ.க.வில் ஐக்கியமாகியிருக்கின்றனர்.

தொடரப்போகும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா?

த.வெ.க அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேலுமணி, சிவி சண்முகம் அறிவுறுத்தலில் விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த பலருக்கும் ஏமாற்றமே பரிசாக கிடைத்திருக்கிறது. அதோடு, தங்களது எம்.எல்.ஏ பதவியும் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் மதில் மேல் பூனையாக இருக்கும் சூழலில், இவர்களுக்கு அவர்களே மேல் என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற யோசனை தோன்றியிருக்கிறது. அதற்கு தோதாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி வேலுமணி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரிடம் செங்கோட்டையனே நேரடியாக பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதனடிப்படையில் பார்த்தால் மேலும் சில அதிமுக எம்.எல்.ஏகள் விரைவில் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget