Siragadikka Aasai: சிட்டியை மிரட்டும் மீனா: வீட்டுக்கு வந்த கடன்காரன்: வசமாக சிக்கிய மனோஜ்: சிறகடிக்க ஆசையில் இன்று!
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மீனா முத்துவின் கார் ஷெட்டுக்கு செல்கிறார். செல்வம், முத்து கார் சவாரிக்கு சென்றுள்ளதாகக் கூறி சமாளிக்குறார். ”அவரு ஆட்டோ ஓட்டுவதை நானே பார்த்தேன். எதுக்குனா அவரு காரை வித்துட்டாரு அப்படி என்னனா அவருக்கு பணத்தேவை வந்துச்சி” எனக் கேட்கிறார் மீனா. உடனே நடந்தவற்றை செல்வம் சொல்கிறார்.
”அவன் மேல நீயும் கோவப்படாதமா, அவன் ஏற்கெனவே வருத்தத்துல இருக்கான்” என்கிறார் செல்வம். ”என் புருஷனையே வந்து கால்ல விழ சொல்லி இருக்கான், அவனை நான் சும்மா விட மாட்டேன்” என்கிறார். சிட்டியின் அலுவலகத்துக்குச் சென்று சிட்டிடம் மீனா சண்டை போடுகிறார். சத்யாவை கையைப் பிடித்து முத்து முறுக்கி விட்டதாக சொல்கிறார் சிட்டி. ”யார்ரா நீ அவரோட கால் தூசிக்கு சமமாக மாட்ட” என்கிறார் மீனா.
”உன்ன மாதிரி அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி வாழல அவரு” என்கிறார் மீனா. ”நீ அவரு கிட்ட இப்படியெல்லாம் பேசி முழுசா நிக்குறனா ஏதோ உன்னோட நல்ல நேரம்னு நெனச்சிக்கோ” என்கிறார் மீனா. ”ஒழுங்கா என் தம்பிய விட்டுடு, அவன் படிக்குற பையன். அசிங்கப்பட்டு போய்டுவ ஜாக்கிறதை என சிட்டியை மீனா மிரட்டி விட்டுச் செல்கிறார்.
”இவ புருஷன் கூட இவ ஒன்னா இருக்கக்கூடாது” என்கிறார் சிட்டி. ”அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?” என உடன் இருப்பவர்கள் கேட்கின்றனர். ”அதான் சத்யா நம்ம கூட இருக்கான் இல்ல. அவன வச்சி தான் அந்த முத்து மீனா வாழ்க்கையில இனி என்னன்ன நடக்கணும் நடக்க கூடாதுன்றத நான் முடிவு பண்ணப் போறேன்” என்கிறார் சிட்டி.
14 லட்சம் பணத்தை அங்கிள் கிட்ட கேட்டு பாரு என ரோகினியிடம் சொல்கிறார் மனோஜ். மனோஜின் பார்க் ஃப்ரண்ட் கடன் கொடுத்த பணத்துக்கு வட்டி கேட்டு வீட்டுக்கு வருகிறார். உடனே ரோகினி வருகிறார். ”நாங்க ரெண்டு பேரும் பார்க்மெட்ஸ்” என சொல்கிறார் மனோஜின் ஃப்ரண்ட். ”ப்ரோ என்கிட்ட ஒரு 20 தவுசண்ட் கடன் வாங்கி இருந்தாரு” என்கிறார். ”வாங்கின காச இது வரையில திரும்ப கொடுக்கல” என்றும் சொல்கிறார்.
”நீ முட்டாளா இல்ல முட்டாள் மாதிரி நடிக்குறியா? ஏன் மனோஜ் நீ இப்டி இருக்க. ஒவ்வொரு தடவையும் என்னை ஏமாத்திக்கிட்டே இருக்க” என்கிறார் ரோகினி. ”கண்டவன் எல்லாம் வீட்டுக்கு வந்து என்னை மிரட்டிட்டு போறான் இதெல்லாம் எனக்கு தேவையா?” என்கிறார் ரோகினி.
மீனா செல்வம் சொன்னதை அண்ணாமலையிடம் சொல்கிறார். ”இதை சொன்னாலும் அவங்க யாரும் அவன் மனச புரிஞ்சிக்க போறது கிடையாது” என்கிறார் அண்ணாமலை. ”நீங்க சிட்டிக்கு காசு கொடுக்க தான் காரை வித்தீங்கனு எனக்குத் தெரியும்” என்கிறார் மீனா. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.