Siragadikka Aasai: விஜயாவுக்கும் ஸ்ருதியின் அம்மாவுக்கும் மோதல்! முத்துவை கோபப்படுத்த ரோகிணி சதி - சிறகடிக்க ஆசையில் இன்று!
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
ஸ்ருதி திட்டம்:
ஸ்ருதியின் அம்மா, தன் கணவரிடம் ”பங்ஷன் முடியுற அப்போ அந்த ரவுடிய கோவப்பட வைக்கணும், நம்ம ரிலேஷன அடிச்சிட்டானு அவனை வச்சி பிரச்சனை பண்ணனும், அவன் குடும்பத்துக்கே வெறுப்பு வரணும். அதை வச்சி நம்ம பொண்ணையும் மாப்பிளையையும் நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்டணும்” என்று சொல்கிறார்.
முத்து வாயைத் திறந்து பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஸ்ருதி அதிக நகை போட்டு ரெடி ஆகி இருக்கிறார். ரவி ஸ்ருதியிடம் ”அழகா இருக்க” என சொல்கிறார். பின் ரவி ஸ்ருதிக்கு முத்தம் கொடுக்கிறார். ஸ்ருதியின் அம்மா மேலும் சில நகைகளை கொண்டு வந்து ஸ்ருதிக்கு போட்டு விடுகிறார்.
முத்துவை குடிக்க வைக்க திட்டம்:
வித்யா ரோகினியிடம் “நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா? ஆனா இப்போ தான் அந்த ஸ்ருதிய பார்த்துட்டு வந்தேன். ஆனா உன்னை விட அவ கைலயும் கழுத்துலயும் நகைய வாரி போட்டுக்கிட்டு இருக்கா” என்கிறார். ”எப்படியாவது சீக்கிரம் இங்க பெரிய பிரச்சனை பண்ணனும்” என சொல்கிறார் ரோகிணி. பின் வித்யா முத்துவை குடிக்க வைக்க தான் ஏற்பாடு செய்திருந்த ஆளுக்கு கால் பண்ணி சீக்கிரம் வர சொல்கிறார்.
”என் மாமியார் கடையோட பேர் மாத்துனத்துக்கே என்னை எண்ணெயில போட்டு பொரிச்ச மாதிரி வறுத்து எடுத்துட்டாங்க” என்கிறார் ரோகிணி. விஜயா ஸ்ருதிக்காக ஒரு மாலை வாங்கி வந்து போட்டுக் கொள்ள சொல்கிறார். ஸ்ருதியின் அம்மா துளசி மாலையை கொண்டு வந்து கொடுத்து போட சொல்கிறார். இதனால் இந்த மாலையை தான் போட வேண்டும் என விஜயாவுக்கும் ஸ்ருதியின் அம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது.
”நீங்க உங்க வீட்ல நடக்கும் போது இந்த மாலையை போட்டுக்கோங்க. இது நாங்க அரேஞ் பண்ணி இருக்க பங்ஷன்” என்கிறார் ஸ்ருதியின் அம்மா. ”என்ன சம்மந்தி இப்டி சொல்லி காட்டுறீங்க” என்கிறார் விஜயா. ”என் பொண்ணு நான் சொல்றத தான் செய்வா” என ஸ்ருதியின் அம்மா சொல்கிறார்.
உடனே ஸ்ருதி ”என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும். என்னை சிலை மாதிரி நடுவுல நிக்க வச்சிட்டு ரெண்டு பேரும் ஆர்கியூ பண்ணிக்கிட்டு இருக்கிங்க, எந்த மாலையை போடணும்னு நான் தான் டிசைட் பண்ணனும்” என ஸ்ருதி சொல்கிறார். பின் ஸ்ருதி இரண்டு மாலையையும் வாங்கி கழுத்தில் போட்டு கொள்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க