மேலும் அறிய

Siragadikka Aasai: அம்மா பாசத்துக்கு இவ்ளோ ஏங்கறாரா? முத்து சொல்ல வந்த ரகசியம்: சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai: ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

அனைவரும் கேம் விளையாட ஸ்டார் செய்கிறனர். ஸ்ருதி, ”என்னைத்தவிர இதுக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?” என ரவியிடம் கேட்கிறார். அதற்கு ரவி ஒரு பொண்ணு மேல ஏற்கனவே க்ரஷ் இருந்ததாக சொல்கிறார். மனோஜ் 'டேர்' சொன்னதால் பனிஷ்மெண்டாக புஷ் அப் எடுக்கிறார். ரவி ரோகினியிடம் ”நீங்க கடைசியா எப்போ எதுக்காக பொய் சொன்னீங்க” எனக் கேட்கிறார்.

அதற்கு ரோகினி, ”ஒரு உண்மை ஒரு நாள் பொய்யா மாறலாம், பொய் ஒரு நாள் உண்மையா மாறலாம்” என்கிறார்.  யாருக்கும் எதுவும் புரியவில்லை. இதனையடுத்து ஸ்ருதி மீனாவிடம் ”உங்களுக்குனு பர்சனலா ஏதாவது ஆசை இருக்கா?” எனக் கேட்கிறார். அதற்கு மீனா, "எங்க அப்பா, என் தம்பி என் குடும்பத்தை நல்லா மேல தூக்கி விடனும்னு நெனச்சாரு, அது நடக்கனும் நம்ம வீட்ல எல்லோரும் சந்தோஷமா இருக்கனும்” என சொல்கிறார்.

முத்து “உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு பார்க்கலாம்” என பாட்டி கேட்கிறார். ”இதே மாதிரி ஒரு பொங்கல் நாள்ல தான் என் அப்பா அம்மா என்னை இங்க கொண்டு வந்து விட்டாங்க. நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கே புரியல. ஆனா அம்மா என் மனசுல எப்டி இருக்காங்க தெரியுமா? அம்மா என்ன ரொம்ப பாசமா பார்த்துப்பாங்க. ஒரு முறை ஸ்கூல் போகும்போது நான் தடுக்கி விழுந்துட்டேன், அம்மா அப்டியே ஓடி வந்து என்னைத் தூக்கி தூசி எல்லாம் துடச்சிட்டு என்னை தோள்ல தூக்கிப் போட்டு பாசமா கூட்டிக்கிட்டு போனாங்க.

அப்போலாம் அம்மா என்கூட இருக்குறது ஏதோ சாமி கூட இருக்குற மாதிரி இருக்கும். நான் பாட்டுக்கு சாப்பிடாம விளையாடப் போய்டுவேன் அம்மா தான் என்னைத் தேடி வந்து உட்கார வச்சி சாப்பாடு ஊட்டி விடுவாங்க. அவங்களுக்கு என்னை அவ்ளோ பிடிக்கும்” என நா தழதழக்க உணர்வுப்பூர்வமாக வருத்தப்பட்டு பேசுகிறார். “இதெல்லாம் பாதியிலேயே போய்டுச்சி. பாவம் ஒரு இடம், பழி ஒரு இடம்னு எல்லாம் என் மேல வந்து விழுந்துடுச்சி. யாருக்கும் தெரியாத ஒரு உண்மைய நான் இப்போ சொல்லப் போறேன்” என சொல்கிறார்.

அதைப்பார்த்து அண்ணாமலை தடுமாறுகிறார். அடுத்து ”விஜயா அவன் பேசுனதெல்லாம் கேட்டியா? அவன் பேசுனதெல்லாம் எதுவும் நிஜத்துல நடக்கல. அவன் கற்பனையில இருக்க அம்மாவ பத்திதான் பேசிட்டு போறான்” என்கிறார்.  ”அவன் என்னைக்கு நல்ல பிள்ளையா நடந்து இருக்குறான்” என்கிறார். அவன் சில விஷயங்கள சொல்லி இருந்தா நாம எப்டி சந்தோஷமா இங்க வந்தோமோ, அதே மாதிரி திரும்பப் போய் இருக்க முடியாது” என சொல்லி விட்டு அண்ணாமலை எழுந்து செல்கிறார். 

மீனா முத்துவிடம் சென்று பேசுகிறார். ”உங்க மனசுக்குள்ளயே நிறைய கஷ்டத்த போட்டு வச்சிருக்கீங்க, என்ன சொல்ல வந்திங்க” எனக் கேட்கிறார். ”உங்க அம்மாவ உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா?” எனக் கேட்கிறார். ”கடைசியா எப்போ அவங்க மடியில படுத்து தூங்குனேனுகூட எனக்கு நியாபகம் இல்லை” என்கிறார். ”நான் உங்களுக்கு எல்லாமாவும் இருப்பேன்”னு மீனா சொல்கிறார். இதனையடுத்து அனைவரும் வீடு திரும்புகின்றனர். மலேசியா மாமாவைப் பற்றி விஜயா பெருமையாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget