Priyanka vs Manimegalai : பிரியங்கா பக்கம் நியாயத்தை பேசிய குரேஷி.. மணிமேகலை சொன்னது உண்மையில்லையா ?
Priyanka Deshpande vs Manimegalai: குக்கு வித் கோமாளியில் இதுவரை அனைவரும் பிரியங்காவை விமர்சித்து வந்த நிலையில் போட்டியாளர் குரேஷி வெளியிட்டுள்ள வீடியோ அந்த பார்வையை மாற்றும் வகையில் அமைந்துள்ளது
பிரியங்கா மணிமேகலை மோதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக பெரிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்த மணிமேகலை மற்றும் போட்டியாளராக கலந்துகொண்ட பிரியங்கா இடையில் கடந்த சில நாட்கள் முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதகாக தெரிவித்தார். மணிமேகலை போட்டியாளராக இருந்தும் நிகழ்ச்சித் தொகுப்பாளரான தனது வேலையில் தலையிட்டது இதற்கு காரணமாக மணிமேகலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மணிமேகலையை சமூக வலைதளங்களில் பலர் விமர்சிக்கத் தொடங்கினார்கள். அனிதா சம்பத் , பாடகி சுசித்ரா உட்பட பலர் மணிமேகலையின் இந்த செயலை பாராட்டினார்கள். ஆனால் தற்போது குக்குகு வித் கோமாளி போட்டியாளரான குரேஷி உண்மையில் நடந்து என்ன என்று வீடியோவில் தெரிவித்துள்ளார். இதுவரை மணிமேகலையை அனைவரும் ஆதரித்து வந்த நிலையில் குரேஷி பேசியுள்ளது அவருக்கு எதிராக அமைந்துள்ளது.
மணிமேகலை... ஏன் எல்லார் முன்னாள் அப்படி செய்தார்?
குரேஷி வெளியிட்டுள்ள வீடியோவில் “ அன்றைய நிகழ்ச்சியில் கடைசியாக திவ்யா எல்லார் பற்றியும் பேசினார். பிரியங்கா தனக்கு இந்த நிகழ்ச்சி முழுவதும் ஆதரவாக இருந்தது பற்றி அவர் பேசினார். பிரியங்காவும் சில விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என்று சொன்னார். ஆனால் மணிமேகலைக்கு அதில் உடன்பாடு இல்லை.
‘ஏற்கனவே வெளியில உங்களைதான் ஆங்கர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் பேச வேண்டாம்.’ என்று மணிமேகலை தெரிவித்தார். ஆனால் பிரியங்கா பேச விருப்பப்பட்டார் மணிமேகலை அதை மறுத்துவிட்டார். அந்த வாரம் முடிந்து அடுத்த வாரம் இந்த நிகழ்வு குறித்து பேச வேண்டும் என்று பிரியங்கா சொன்னார். ‘ நான் பேச வேண்டும் என்கிறபோது என்னுடைய உரிமை மறுக்கப்பட்டது.’ அதை பற்றி நான் நிச்சயம் மணிமேகலையிடம் பேச வேண்டும் என்று பிரியங்கா சொன்னார்.
ஆனால் மணிமேகலை தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னதாக எனக்கு நியாபகம் இல்லை. மணிமேகலை பிரியங்காவிடம் நேரடியாக சொல்லாமல் அவரை பேசவிட்டு நிகழ்ச்சி முடிந்தபிறகு கூட சொல்லியிருக்கலாம். அவர் ஒருவர் பேசுவதை மறுத்துவிட்டு தன்னுடைய சுய மரியாதை போய்விட்டதாக சொல்கிறார். இந்த துறையில் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் அதிகமாக பெர்ஃபார்ம் பண்ணி வரும் நிலைதான் இருக்கிறது. இப்படியான இடத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாக இதை கையாண்டிருக்கலாம். ஆனால் மணிமேகலை அந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் நான் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை என்றுவிட்டு கேரவானுக்குள் போய்விட்டார். அன்று இரண்டு மணி நேரம் ஷூட்டிங் நடக்கவில்லை. உண்மையில் நடந்தது இதுதான்” என்று தெரிவித்துள்ளார்