Kizhakku Vaasal, August 24: போலீஸ் ஸ்டேஷனில் ஷண்முகம்.. அதிர்ச்சியில் சாமியப்பன்.. கிழக்கு வாசல் சீரியல் இதோ..!
Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.
Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆகஸ்ட் 25) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.
கிழக்கு வாசல் சீரியல்
தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோட் அப்டேட்
சிவகாமி சாமியப்பன் தான் இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு தயாளனை படிக்க வைத்ததாக கூற, அதனைக் கேட்டு ரேணு கண்கலங்குகிறாள். இவளின் நல்ல உள்ளம் அவனுக்கு புரியல என சிவகாமி தெரிவிக்கிறார். உடனே சாமியப்பன் ரேணுவிடம், எனக்கு ஒவ்வொரு நேரத்துலயும் ஒரு கமிட்மென்ட் இருக்கும். அதனால இப்ப நீ படிக்கணும், படிச்சே ஆகணும் என தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, சாமியப்பனிடம் சொல்லி விட்டு ஷண்முகம் ஆட்டோ ஸ்டாண்டிற்கு புறப்படுகிறான். அப்போது வீட்டுக்கு போலீஸ் வருகிறது. ஷண்முகத்தை பிடித்து ஸ்டேஷனுக்கு இழுத்துப் போக முயசிக்கையில் சாமியப்பன், என்ன நடந்தது என விசாரிக்கிறார். அதற்கு போலீஸ், வழக்கறிஞர் தயாளனை அடித்ததாக கூற அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். என்னாச்சு என சாமியப்பன் ஷண்முகத்திடம் கேட்க, அவனோ தான் அர்ஜூனை மட்டும் தான் அடித்தேன் என கூறுகிறான். இதனால் ரேணு, நடேசன் இருவரும் அவனை திட்டுகின்றனர். பின்னர் ஷண்முகம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்படுகிறான்.
அவனை கூட்டி வர சாமியப்பன், மாணிக்கம், ரேணு ஆகியோர் செல்கிறார்கள். ஆனால் தயாளன் மனது வைத்தால் தான் இந்த விவகாரத்தில் ஷண்முகம் வெளியே வர முடியும் ஸ்டேஷனில் சொல்ல, 3 பேரும் தயாளன் வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு மாணிக்கம், சாமியப்பன் இருவரை மட்டும் உள்ளே வர சொல்லி விட்டு ரேணுவை வெளியே தான் நிற்க வேண்டும் என தயாளன் கூறுகிறார். ஷண்முகம் வெளியே வந்தால் போதும் என ரேணு வெளியே இருக்க, இருவரும் உள்ளே போய் சமரசம் பேசுகின்றனர். ஆனால் தயாளனும், கீதாவும் இந்த விவகாரத்தை சும்மா விடுவதாக இல்லை என தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே தனது வீட்டுக்கு வரும் அர்ஜூன் வாசலில் ரேணு நிற்பதை கண்டு உள்ளே அழைக்கிறார். ஆனால் ஷண்முகத்தை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைத்து செல்லும் முயற்சிக்காக மட்டுமே தான் வந்ததாகவும், மற்ற எதையும் பேச தான் வரவில்லை எனவும் ரேணு கறாராக கூற அர்ஜூன் அதிர்ச்சியடைகிறான். மேலும் சாமியப்பன், மாணிக்கம் இருவரும் சோகமாக வெளியே வர அர்ஜூன் நான் வேண்டுமானால் போலீஸ் ஸ்டேஷன் வந்து உதவுகிறேன் என கூறுகிறான்.ஆனால் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என கூறி விட்டு 3 பேரும் ஷண்முகத்தை மீட்க போலீசாரிம் போய் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.