Baakiyalakshmi: முழு வில்லனாக மாறிய கோபி.. விரைவில் சிக்கப்போகும் செழியன்.. பாக்கியலட்சுமியில் இன்று!
Baakiyalakshmi Oct 06: செழியன் மீது சந்தேகப்பட்டு பாக்கியா அவனைக் கண்டிக்கிறாள். புதிய சமையல் காண்ட்ராக்ட்டை பாக்கியாவுக்கு கிடைக்க விடாமல் தடுத்து விடுகிறார் கோபி. பாக்கியலட்சுமியில் என்ன நடக்கிறது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் காலை ஆனபிறகும் ஹாஸ்பிடலுக்கு செழியன் வராததால் ஜெனி பாக்கியாவிடம் சொல்லி செழியனுக்கு போன் செய்ய சொல்கிறாள். பாக்கியாவும் செழியனுக்கு போன் செய்யவும் செழியன் ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறான்.
செழியன் மீது சந்தேகப்பட்ட பாக்கியா அவனை தனியாக அழைத்து சென்று "நீ செய்வது எதுவும் சரியில்லை. ஏதோ தப்பா இருக்கு" என சொல்லி கண்டிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பாக்கியா ஈஸ்வரியிடம் புதிய சமையல் காண்ட்ராக்ட் ஒன்று எடுக்க போவதாக சொல்லி, அது குறித்து பேசுவதற்காக கிளப்புகிறேன் என சொல்கிறாள். ஈஸ்வரி பாக்கியாவிடம் "எப்படியாவது நீ இந்த காண்ட்ராக்ட்டை எடுத்து அந்த ராதிகாவோட முகத்தில் கரியை பூச வேண்டும்" என சொல்லி வாழ்த்தி அனுப்புகிறார்.
ஜெனியை வீட்டுக்கு அழைத்து வருவது குறித்து ஈஸ்வரியிடம் பாக்கியா பேச "கொஞ்ச நாள் ஜெனி அவங்க அம்மா வீட்ல இருக்கட்டும். அப்புறமா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்" என ஈஸ்வரி சொல்கிறார். ராமமூர்த்தி பாக்கியாவிடம் "எதற்காக ஜெனியை வீட்டுக்கு இப்பவே கூட்டிட்டு வரணும் என சொல்ற?" எனக் கேட்கிறார். "செழியன் நடவடிக்கை எதுவும் சரியில்லை. ஏதோ தப்பா இருக்கு" என்கிறாள் பாக்கியா. அதற்கு ராமமூர்த்தியும் "நானும் அதை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்" என சொல்கிறார்.
நிலா பாப்பாவுடன் எழில் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்கிறான். செழியன் குழந்தையைப் பார்த்த பிறகு எழிலுக்கு குழந்தை மீது ஆசை வந்து விடுகிறது. அப்போது அங்கே வந்த அமிர்தாவிடம் "நாமளும் ஒரு குழந்தை பெத்துக்கலமா" என கேட்கிறான் எழில். அதைக் கேட்டு சந்தோஷப்படும் அமிர்தா சம்மதம் சொல்கிறாள்.
பாக்கியா சமையல் காண்ட்ராக்ட் விஷயமாக ஒரு ஆபிஸூக்கு செல்கிறாள். அது கோபியின் நண்பன் வினோத்தின் மாமனார் ஆபீஸ். எதேச்சையாக கோபி அங்கே வர பாக்கியாவை பார்த்து விடுகிறார். எதற்காக பாக்கியா அங்கே வந்து இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு தனது நண்பன் வினோத்திடம் பேசி அந்த காண்ட்ராக்ட் பாக்கியாவுக்கு கிடைக்காத மாதிரி செய்து விடுகிறார்.
காண்ட்ராக்ட் பாக்கியாவின் கையில் வரும் சமயத்தில் அதைக் கெடுத்துவிட்ட கோபி, பாக்கியாவும் செல்வியும் வெளியே வந்ததும் "இந்த சிட்டி உள்ள நீ எங்கேயும் புது காண்ட்ராக்ட் இனிமே எடுக்கவே முடியாது, எடுக்கவும் நான் விடமாட்டேன்" என வில்லன் போல பேசுகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.