Baakiyalakshmi: கோபியின் உதவியை நாடிய பாக்கியா.. தவறாகப் புரிந்து கொண்ட ராதிகா.. பாக்கியலட்சுமியில் இன்று!
Baakiyalakshmi Oct 31: மீண்டும் அமிர்தாவைத் தேடி வீட்டுக்கு வந்த கணேஷைப் பார்த்து அதிர்ச்சி அடையும் பாக்கியா., கோபியிடம் பாக்கியா உதவி கேட்டதை பார்த்துவிட்ட ராதிகா.. பாக்கியலட்சுமியில் இன்று!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்.31) எபிசோடில் கோயிலில் அன்னதானம் நல்லபடியாக நடந்தால் கோயில் நிர்வாகிகள் மிகவும் சந்தோஷமடைய, அட்வான்ஸ் பணம் போக மீதித் தொகையை பாக்கியாவிடம் கொடுக்கிறார்கள். பாக்கியா அதை வாங்கிக் கொண்டு சந்தோஷப்படுகிறாள்.
அந்த நேரத்தில் பழனிச்சாமி வரவே, கோயில் நிர்வாகிகளிடம் சொல்லிவிடாதீர்கள் என சைகை மூலம் சொல்கிறார். ஆனாலும் கோயில் நிர்வாகிகள் பழனிச்சாமி சொல்லி தான் பாக்கியாவுக்கு இந்த சமையல் ஆர்டர் வந்த விஷயத்தைப் பற்றி சொல்லிவிடுகிறார்கள். பாக்கியா பழனிச்சாமியிடன் ஏன் இது பற்றி சொல்லவே இல்லை எனக் கேட்கிறாள்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பாக்கியா டல்லாக பேசவே பழனிச்சாமி என்ன நடந்தது எனக் கேட்க, பாக்கியா செழியன் மாலினி விஷயத்தைப் பற்றி சொல்கிறாள். செழியனிடம் ஒரு முறை பேசிப் பார்க்க சொல்லி சொல்கிறார் பழனிச்சாமி.
வீட்டில் கோபி சோபாவில் உட்கார்ந்து இருக்க, ராதிகா வந்து கோபியிடம் சண்டை போடுகிறாள். அப்போது இனியா நிலாவைக் கூட்டிட்டு வரவும் கோபி நிலாவை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். இனியாவின் காலேஜ் எப்படிப் போகுது என ராதிகா கேட்கிறாள். அந்த நேரம் பாக்கியா வீட்டுக்கு வர, கோபி, ராதிகா, இனியா உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டு அமைதியாக உள்ளே சென்று விடுகிறாள்.
கணேஷ் பாக்கியாவின் வீட்டுக்கு வருகிறான். கோபி கணேஷைப் பார்த்ததும் நிலா பாப்பாவை பற்றி கேட்கிறான் கணேஷ். "ஓ எழிலோட ப்ரெண்டா" என சொல்லி உள்ளே அழைத்து செல்கிறார் கோபி. எதேச்சையாக பாக்கியா வெளியில் வர, கோபியுடன் கணேஷ் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். "எழில் இல்லை அவன் வர லேட்டாகும். எழில் வந்தா நான் போன் பண்ண சொல்றேன். நீ இப்போ கிளம்பு" என சொல்லி அவசர அவசரமாக கணேஷை அனுப்புகிறாள். வாசலில் சென்றதும் கணேஷிடம் போய் "நான் உங்க அப்பா அம்மாவை வந்து நேரில் சந்திக்கிறேன். நீ இப்போ வீட்டுக்கு போ" என சொல்லி அனுப்பி வைக்கிறாள் பாக்கியா.
இதைப் பார்த்த கோபி பாக்கியாவிடம் "ஏன் அனுப்பிட்ட.. ஏதோ தனியா கூட்டிட்டு போய் பேசுன?" எனக் கேட்க வேறு வழி தெரியாமல் "இந்த விஷயம் வீட்டில யாருக்கும் தெரிய வேணாம். நான் உங்களோடு கொஞ்சம் பேசணும். எனக்கு என்ன முடிவு எடுக்குறது என தெரியல. நாளைக்கு வாக்கிங் போகும்போது பேசலாம்" என பாக்கியா கோபியிடம் பேச முயற்சிக்க, அங்கே ராதிகா வந்ததால் பாக்கியா எதுவுமே சொல்லாமல் சென்று விடுகிறாள். அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை ராதிகா கேட்டுவிடுகிறாள்.
பாக்கியா கணேஷின் அம்மாவுக்கு போன் செய்து "நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்" என சொல்கிறாள். "நாங்க இனிமேல் எங்க பையனுக்கு தான் சப்போர்ட் பண்ணப் போறோம்" என கணேஷ் அம்மா சொல்ல அதிர்ச்சி அடைகிறாள் பாக்கியா.
அன்று இரவு பாக்கியா தனியாக சமையலறையில் இருக்கும்போது அங்கே ராதிகா வந்து பாக்கியாவை வம்புக்கு இழுக்கிறாள். "இனிமே நானே எல்லாத்தையும் பாத்துக்குவேன் என சொன்னீங்க... இப்போ எதுக்கு உதவி கேக்குறீங்க" என ராதிகா பாக்கியாவிடம் கேட்க, "உங்ககிட்ட சண்டை போட எனக்கு நேரம் இல்லை. தயவு செய்து என்னுடைய வாயைக் கிளறாதீங்க. அதை வைத்து ஒரு பஞ்சாயத்து வைக்கலாம் என நினைக்காதீங்க" என சொல்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.