Baakiyalakshmi: வில்லத்தனத்தைக் காட்டிய மாலினி... கோபிக்கு வந்த சோதனை.. பாக்கியலட்சுமியில் இன்று!
Baakiyalakshmi Oct 25: கோபிக்கு பணத்தை உடனே கட்ட சொல்லி கேடு கொடுக்கும் பேங்க் ஆட்கள்.. மாலினி செய்த காரியத்தால் பதறிப் போன குடும்பம். பாக்கியலட்சுமியில் இன்று!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்.25) எபிசோடில், மாலினி செழியனுக்கு போன் செய்து கொண்டே இருக்கிறாள். செழியன் போனை எடுக்காததால் திரும்பத் திரும்ப கால் செய்கிறாள்.
கடுப்பான செழியன் போனை எடுத்துப் பேசுகிறான். அவன் பேசிக்கொண்டே இருக்கும்போது பாக்கியா அங்கே வந்து விடுகிறாள். செழியனிடம் "ஏதாவது பிரச்சினையா? ஏன் மாலினி உனக்கு அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருக்கா? ஏதாச்சும் சொல்லி மிரட்டுறாளா?" என பாக்கியா கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க் அது தான்" என சொல்லி சமாளித்துவிட்டு உள்ளே சென்று விடுகிறான்.
அடுத்த நாள் காலை கோபி வாக்கிங் செல்லும் போது வழியில் பார்க்கும் அனைவரும் கோபியை நலம் விசாரித்துக் கொண்டே செல்கிறார்கள். அப்போது ஒருவர் பேசிக் கொண்டு இருக்கும்போது பாக்கியா எதிரில் வர, "கோபி சாருக்கு ஹார்ட் அட்டாக்... நீங்க அவரை என்னனு கேக்க மாட்டீங்களா?" எனக் கேட்க, "நான் என்ன கார்டியாலிஸ்ட்டா?" எனக் கேட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள் பாக்கியா.
“இவர்களுக்கு பதில் சொல்வதற்கு பதிலா வீட்டுக்கே போய்விடலாம்” என கோபி தனக்குள்ளே பேசிக்கொண்டு செல்ல, வீட்டு வாசலில் பேங்க் ஆட்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் கோபி ஒரு மாசம் டைம் கேட்டு கொண்டு இருக்கிறார். ஆனால் அவர்களோ உடனே செலுத்தும் படி சொல்கிறார்கள். கோபி பேங்க் ஆட்களுடன் பேசிக்கொண்டு இருப்பதை பாக்கியா பார்த்து விடுகிறாள். உடனே கோபி எதையோ பேசி சமாளித்து விடுகிறார்.
அப்போது ராதிகா கோபியைப் பார்த்து பேச வரவே, கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வந்து கோபியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்.
பாக்கியா, ஈஸ்வரி மற்றும் ஜெனி மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது மாலினி வீட்டுக்கு வருகிறாள். அவளைப் பார்த்ததும் அனைவருக்கும் முகமே மாறிவிடுகிறது. செழியனைப் பற்றி மாலினி விசாரித்தும் "அவன் எங்கேயோ முக்கியமான வேலையா போய் இருக்கான்" என ஜெனி சொல்கிறாள்.
"நான் செழியனுக்கு போன் பண்ணறேன் பாருங்க அடுத்த பத்து நிமிஷத்துல இங்க வந்து நிற்பான்" என சவால் விட்டு மாலினி செழியனுக்கு போன் செய்து "நான் உன்னோட வீட்ல தான் இருக்கேன்" என சொன்னதும் விழுந்த அடித்து கொண்டு வீட்டுக்கு வருகிறான் செழியன். அதைப் பார்த்து ஜெனியும் பாக்கியாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பின்னர் அனைவரும் வேலையாக உள்ளே செல்ல, குழந்தையை மாலினியிடம் கொடுக்கிறாள் ஜெனி. அந்த நேரம் பார்த்து செழியனுக்கு ஆபீஸ் கால் வர வெளியில் சென்று பேசுகிறான். அப்போது மாலினி குழந்தையைக் கொண்டு போய் ஒலித்து வைத்து விடுகிறாள்.
ஜெனி வந்து குழந்தை எங்கே எனக் கேட்டதும் செல்வியை காட்டி "நான் அவங்க கிட்ட தான் கொடுத்தேன்" என பொய் சொல்கிறாள் மாலினி. "சத்தியமா என்கிட்டே கொடுக்கல. அவங்க பொய் சொல்றாங்க" என செல்வி சொல்ல அனைவரும் குழந்தை காணவில்லை என பதறிப்போகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.