மேலும் அறிய

Baakiyalakshmi: அமிர்தா அம்மாவுக்கு கணேஷ் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.. பாக்கியலட்சுமியில் இன்று !

Baakiyalakshmi Oct 24: அமிர்தாவின் அம்மாவுக்கு கணேஷ் கொடுத்து ஷாக்.. பாக்கியாவிடம் கெஞ்சி கேட்ட அமிர்தாவின் அம்மா.. ராதிகா வீட்டுக்குச் சென்ற கோபியை மீண்டும் வீட்டுக்கு இழுத்து வந்த ஈஸ்வரி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்.24) எபிசோடில் கணேஷ் வீட்டுக்கு அமிர்தாவின் அம்மா வருகிறார். கணேஷின் அம்மா அப்பாவிடம் "அமிர்தா வாழ்க்கையில் இனி கணேஷ் தலையிடக் கூடாது. இப்ப வந்த உங்க மகன் கொஞ்ச நாளுக்கு முன்னாடி வந்து இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். இரண்டு வருஷமா என்னோட பொண்ணு கஷ்டப்பட்டு இப்போ தான் நிம்மதியா இருக்கா. அவ வாழ்க்கையில் தயவு செய்து கெடுத்துடாதீங்க" என சொல்கிறார்.

அப்போது கணேஷ் அங்கே வந்து "அமிர்தா என்னுடைய மனைவி, நிலா என்னுடைய மகள் அவர்களை நான் எப்படி வேறு ஒருத்தனுக்கு விட்டுக் கொடுக்க முடியும். எனக்கு அவங்க இரண்டு பேருமே வேணும்" என்கிறான்.

"நீங்க யாரும் அமிர்தா வீட்ல இருக்கிறவங்க கிட்ட பேசக்கூடாது. அப்படி ஏதாவது நடந்ததுனா நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாது" என அமிர்தாவின் அம்மா சொல்ல "பாக்கியா கிட்ட நாங்க பேசிகிட்டு தான் இருக்கோம். இதில் நம்ம முடிவு செய்ய ஒண்ணுமே இல்லை. சம்பந்தப்பட்டவங்க தான் இதில் முடிவெடுக்க வேண்டும்" என்கிறார்கள் கணேஷின் அம்மா அப்பா. பாக்கியாவுக்கு இந்த விஷயம் தெரியும் என அவர்கள் சொன்னதும் அமிர்தாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார்.  

Baakiyalakshmi: அமிர்தா அம்மாவுக்கு கணேஷ் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.. பாக்கியலட்சுமியில் இன்று !
வீட்டில் ராமமூர்த்தி நிலாவுக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போது ஈஸ்வரி மிகவும் வருத்தமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அப்போது அமிர்தாவின் அம்மா பாக்கியா வீட்டுக்கு வந்து அனைவரையும் நலம் விசாரிக்கிறார். ஜெனிக்கு வாழ்த்துக்களை சொல்லி குழந்தைக்காக வாங்கி வந்த வளையலை கொடுக்கிறார். பிறகு அமிர்தாவுடன் ரூமில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது பாக்கியா உள்ளே வர அமிர்தாவின் அம்மா அமிர்தாவை போய் காபி போட்டு எடுத்துக்கொண்டு வர சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அமிர்தா சென்றதும் அவளின் அம்மா பாக்கியாவின் கையை பிடித்துக் கொண்டு அழுகிறார். "கணேஷ் பத்தின உண்மை உங்களுக்குத் தெரியும் என அவரோட அம்மா அப்பா சொன்னாங்க. என்னோட பொண்ணு இரண்டாவது கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு வந்தா என அவளை விட்டுக் கொடுத்துறாதீங்க. செத்து போன புருஷன் இப்போ திரும்பி உயிரோட வந்துட்டான் என தெரிஞ்சா அவ மனசு என்ன பாடுபடும். குற்ற உணர்ச்சியில் செத்தே போயிடுவா. அவளை கைவிட்டுறாதீங்க" என அழுது கெஞ்சுகிறார்.

"இந்த விஷயம் வீட்ல இருக்கவங்களுக்கு தெரிஞ்சா பெரிய பிரளயமே நடக்கும். எனக்கும் என்ன பண்ணறதுனே தெரியல" என பாக்கியா சொல்ல, அந்த நேரத்தில் அமிர்தா உள்ளே வந்ததும் அவர்கள் இருவரும் பேச்சை மாற்றி விடுகிறார்கள்.

Baakiyalakshmi: அமிர்தா அம்மாவுக்கு கணேஷ் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.. பாக்கியலட்சுமியில் இன்று !

கோபி மயூவையும், ராதிகாவையும் பார்ப்பதற்காக வீட்டுக்கு வருகிறார். மயூ கோபியை பார்த்து சந்தோஷப்படுகிறாள். "என்ன வந்துட்டீங்க? இது என்னோட வீடு நீங்க இருக்கக் கூடாது என பாக்கியா சொல்லிட்டாளா?" என ராதிகாவின் அம்மா கேட்கிறார். "உங்க அம்மா அவ்வளவு பேசுறாங்க ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட பேசல" என ராதிகாவும் கோபித்துக் கொள்ள "ஒரு வாரம் தான் அதுக்கு அப்புறம் நானே கிளம்பி வந்துடுவேன்" என ராதிகாவுக்கு கோபி சத்தியம் செய்ய, அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து கோபியை திட்டுகிறார்.

மயூ கோபியைப் பார்த்து "அப்போ கிளம்புறீங்களா டாடி" எனக் கேட்க ஈஸ்வரி மயூவை திட்டுகிறார். "இங்க பாருங்க உங்க பையன கூட்டிட்டு போக தான் வந்தீங்க. கூட்டிட்டு போங்க. குழந்தைகிட்ட எல்லா தப்பா பேசாதீங்க" என ஈஸ்வரியை பார்த்து சொல்கிறாள் ராதிகா. "இனிமே இங்க வந்தனா பாரு" என சொல்லி கோபியை அழைத்துச் சென்று விடுகிறார் ஈஸ்வரி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget