மேலும் அறிய

Baakiyalakshmi: கணேஷ் பற்றிய உண்மையை அறிந்த பாக்கியா.. செழியன் வீட்டுக்கு வந்த மாலினி.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு!

Baakiyalakshmi Oct 14: மறுபடியும் செழியனைப் பார்க்க வீட்டுக்கு வருகிறாள் மாலினி. கணேஷ் உயிருடன் வந்ததைப் பற்றி பாக்கியாவுக்கு தெரிய வருகிறது. இன்றைய எபிசோடில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 14) எபிசோடில் கணேஷ் சொன்ன இடத்திற்கு வந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் பார்க்கிறார்கள். கணேஷை எவ்வளவோ சமாதானம் செய்கிறார்கள். ஆனால் கணேஷ் மனது மாறுவதாக இல்லை.

Baakiyalakshmi: கணேஷ் பற்றிய உண்மையை அறிந்த பாக்கியா.. செழியன் வீட்டுக்கு வந்த மாலினி.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு!

"அமிர்தாவும்  நானும் எங்கள் வாழ்க்கையைப் பற்றி நிறைய கனவு கண்டு பேசி இருக்கிறோம், எங்களுக்கு அழகான ஒரு குழந்தை இருக்கிறது. நான் எவனுக்காகவும் அமிர்தாவை விட்டுக்கொடுக்க முடியாது. அவள் எனக்கு வேண்டும் அவளோடு தான் வாழ்வேன். அவளையும் நிலாவையும் அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு வருவேன்" என ஆவேசமாக பேசுகிறான்.

கணேஷ் அம்மாவும் அப்பாவும் "வாழ வேண்டிய வயசுல அவளோட வாழ்க்கையை தொலைச்சுட்டாளே என நாங்க தான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சோம். இப்போ அவ உன்னுடைய அமிர்தா இல்லை. நீ அவளுடன் வாழ நினைப்பது சரியும் இல்லை" என சொல்கிறார்கள். ஆனால் அவர்களைத் தூக்கியெறிந்து பேசிய கணேஷ் “எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்” என சொல்லிவிட்டு சென்று விடுகிறான்.

Baakiyalakshmi: கணேஷ் பற்றிய உண்மையை அறிந்த பாக்கியா.. செழியன் வீட்டுக்கு வந்த மாலினி.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு!

வீட்டில் பாக்கியா, செழியன், ஜெனி மாற்றும் அமிர்தா உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டுக்கு வந்த மாலினியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தாலும் சாதாரணமாக இருக்க முயற்சிக்கிறார்கள். பாக்கியாவுக்கு செழியன் நடவடிக்கை பார்த்து மாலினி மீது சந்தேகம் வருகிறது.

மாலினி ஏதோ அர்ஜென்ட் ப்ராஜெக்ட் விஷயமாக வந்து இருப்பதாக சொல்கிறாள். பாட்டியின் ரூமில் உட்கார்ந்து வேலையை பார்க்கச் சொல்கிறாள் பாக்கியா. ரூமுக்கு சென்றதும் செழியனின் கையை பிடித்துக் கொண்டு “எனக்கு எப்போ எல்லாம் தோணுதோ, அப்போ எல்லாம் நான் வருவேன்” என அவனை பிளாக்மெயில் செய்கிறாள் மாலினி.

Baakiyalakshmi: கணேஷ் பற்றிய உண்மையை அறிந்த பாக்கியா.. செழியன் வீட்டுக்கு வந்த மாலினி.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு!

“பாக்கியாவுக்கு கணேஷின் அம்மா, அப்பா போன் செய்து பேசுகிறார்கள். நாங்கள் உங்களை சந்திக்க சென்னைக்கு வந்து இருக்கிறோம். உங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் பற்றி பேசவேண்டும்” என சொல்லி பாக்கியாவை  அவர்கள்  இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறார்கள்.

அவர்களை சந்திக்க வந்த பாக்கியா "ஏதாவது பிரச்சினையா? அமிர்தா ஏதாவது சண்டை போட்டுவிட்டாளா?" என பதட்டத்துடன் கேட்கிறாள். அப்போது அவளிடம் தயங்கி தயங்கி பேசுகிறார்கள் கணேஷின் அப்பா அம்மா. "அமிர்தா வாழ்க்கை நல்லபடி இருக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அவளை எழிலுக்கு கல்யாணம் செய்து வைத்தோம். ஆனால் இப்படி ஒரு பிரச்சினை வரும் என நாங்கள் நினைக்கவே இல்லை" என அவர்கள் சொல்லவும் எதுவும் புரியாமலே பதட்டமாகிறாள் பாக்கியா.

Baakiyalakshmi: கணேஷ் பற்றிய உண்மையை அறிந்த பாக்கியா.. செழியன் வீட்டுக்கு வந்த மாலினி.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு!

செத்துப்போனதாக நினைத்த எங்களுடைய மகன் கணேஷ் உயிரோடு வந்து நிற்கிறான் என உண்மையை சொன்னதும் பாக்கியா அப்படியே அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போய் நிற்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget