மேலும் அறிய

Baakiyalakshmi : வீட்டுக்கே வந்த மாலினி.. ஒளிந்து நின்று அமிர்தாவை நோட்டம்விடும் கணேஷ்.. பாக்கியலட்சுமியில் இன்று!  

Baakiyalakshmi Oct 12: செழியனை பார்க்க வீட்டுக்கே வந்து ஷாக் கொடுக்கிறாள் மாலினி. அமிர்தாவை பார்க்க வந்த கணேஷ் ஒளிந்து நிற்க, அதைப் பார்த்துவிடுகிறாள் பாக்கியா. பாக்கியலட்சுமியில் என்ன நடக்கிறது? 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் செழியன் மாலினியைப் பார்க்க கிளம்பியதால் அவன் மீது சந்தேகப்பட்டு மிரட்டி ரூமுக்கு அனுப்பி வைக்கிறாள் பாக்கியா.

ரூமுக்குச் சென்றும் தூங்காமல் மாலினி என்ன செய்வாளோ என்ற பயத்திலேயே இருக்கிறான் செழியன். அவள் அனுப்பிய ஃபோட்டோவை பார்த்து பதறுகிறான். மறுபடியும் மாலினி வீட்டுக்குப் போக, கீழே இறங்கி வந்து பார்த்தால் பாக்கியா அங்கே சோஃபாவிலேயே படுத்து தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து ஷாக்காகி மறுபடியும் மாடிக்கே சென்று விடுகிறான். 

Baakiyalakshmi : வீட்டுக்கே வந்த மாலினி..  ஒளிந்து நின்று அமிர்தாவை நோட்டம்விடும் கணேஷ்.. பாக்கியலட்சுமியில் இன்று!  

அடுத்த நாள் காலையிலேயே அமிர்தாவை தேடி பாக்கியாவின் வீட்டுக்கு வருகிறான் கணேஷ். அவன் கேட்டை திறந்ததும் யாரோ வீட்டு கதவை திறந்து வெளியில் வரும் சத்தம் கேட்கவே கேட்டுக்கு பின்னால் மறைந்து  இருந்து பார்க்கிறான். அமிர்தா தான் வாசல் தெளித்து கோலம் போட  வருகிறாள். அவளைப் பார்த்ததும் கணேஷ் முகம் பிரகாசமாகி விடுகிறது. அவள் பெருக்கிக் கொண்டிருக்கும் போது அவளது தாலியை பார்த்து விடுகிறான். அப்போது பாக்கியாவும் வெளியே வரவே திரும்பவும் போய் மறைந்து கொள்கிறான். 

பாக்கியா அமிர்தாவிடம் வெளியிலும் சின்னதாக கோலம் போட சொல்கிறாள். அப்போது வெளியில் யாரோ நின்று இருப்பது போல தோன்றவே, அமிர்தாவை கோலம் போட வேண்டாம் எனவும், போய் பாலை காச்ச சொல்லி யும் அனுப்பி வைத்துவிடுகிறாள். அப்போது கணேஷ் எட்டிப் பார்க்க பாக்கியாவுக்கு சந்தேகம் உறுதியாகிவிடுகிறது. 

வெளியில் சென்று பார்க்கிறாள் பாக்கியா ஆனால் அதற்குள் கணேஷ் ஓடிவிடுகிறான். நேற்று வந்த அதே பையன் தான் என கண்டுபிடித்துவிடுகிறாள் பாக்கியா. 

பின்னர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது செழியன் ஜெனியை ஓவராக கவனிக்க, அனைவரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். அப்போது யாரோ வந்து காலிங் பெல்லை அடிக்க பாக்கியா சென்று பார்க்கிறாள். வந்து இருப்பது மாலினி. செழியன் இல்லையா என மாலினி கேட்க, அவளின் குரலைக் கேட்டு பதறி அடித்துக்கொண்டு ஓடிவருகிறான் செழியன். 

Baakiyalakshmi : வீட்டுக்கே வந்த மாலினி..  ஒளிந்து நின்று அமிர்தாவை நோட்டம்விடும் கணேஷ்.. பாக்கியலட்சுமியில் இன்று!  

பாக்கியாவிடம் மாலினி நான் செழியன் ப்ரெண்ட் என சொல்லி அறிமுகம் செய்து கொள்கிறாள். பின்னர் வீட்டில் இருப்பவர்களை நான் பார்க்கலாமா என சொல்லி நேரடியாக டைனிங் ஹாலுக்கே வந்து விடுகிறாள். அங்கும் சென்று நான் செழியன் ப்ரெண்ட் என அறிமுகம் செய்து கொள்ள அனைவரும் ஷாக்காகிறார்கள். செழியன் திருட்டு  முழி முழிப்பதை பார்த்து பாக்கியாவுக்கு சந்தேகம் வருகிறது. 

மாலினி குழந்தையை வாங்கிக் கொஞ்சுகிறாள். பாக்கியாவிடம் எனக்கு சமையலில் ஏதாவது சந்தேகம் வந்தால் உங்களுக்கு போன் பண்ணலாமா என கேட்டு பாக்கியாவின் போன் நம்பரை வாங்கி கொள்கிறாள். அதே போல ஜெனியின்  போன் நம்பரையும் வாங்கிக் கொள்கிறாள் மாலினி. இதைப் பார்த்த செழியனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பிறகு நான் கிளம்புகிறேன் என சொல்ல, ஈஸ்வரி செழியனை போய் வழியனுப்பி விட்டு வரச்சொல்கிறார்.

வெளியில் சென்று செழியனிடம் "இது வெறும் சாம்பிள் தான் இனி நான் அடிக்கடி வருவேன். அப்போது கண்டிப்பாக உண்மையை எல்லோரிடமும் சொல்வேன்" என சொல்லிவிட்டு செல்கிறாள் மாலினி. அப்படியே மிரண்டு போய் நிற்கிறான் செழியன். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget