Baakiyalakshmi: பிளாக்மெயில் செய்த மாலினி.. கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்த எழில்.. பாக்கியலட்சுமியில் இன்று!
Baakiyalakshmi Oct 05: செழியனை பிளாக்மெயில் செய்து வீட்டுக்கு வர வைத்து தங்க வைக்கிறாள் மாலினி. கோபியைத் தேடி வந்த பிரச்னையை அழகாக கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்த எழில். பாக்கியலட்சுமி இன்று!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் மாலினி செழியனுக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்ததால் போனை எடுத்து பேசுகிறான். "நான் மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் இருக்கிறேன் என்னால் இப்போது வரமுடியாது" என சொல்கிறான் செழியன். "அப்படி என்ன வேலை, உங்களுக்கு ஒன்னும் ஆகல இல்ல" எனத் தொடர்ந்து நச்சரிக்க, வேறு வழியில்லாமல் "எனக்கு குழந்தை பிறந்து இருக்கு. நான் ஹாஸ்பிடலில் இருக்கிறேன். என்னால் இப்போது வரமுடியாது" என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறான்.
மாலினி செழியனுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்புகிறாள். அதில் செழியன் தன்னைப் பார்க்க உடனே வரவில்லை என்றால் கையை அறுத்துக்கொள்வேன்” என பிளாக்மெயில் செய்கிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சியான செழியன், பாக்கியாவிடம் “ஆபிசில் அவசர வேலை. ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன்” என பொய் சொல்லிவிட்டு பதட்டத்துடன் ஓட்டுகிறான். பாக்கியா எவ்வளவு தடுத்தும் செழியன் கேட்கவில்லை.
செழியனைப் பார்த்ததும் மாலினி சந்தோஷப்படுகிறாள். "உங்களுக்காக நான் காத்திருப்பேன் எனத் தோணவே இல்லையா?" எனக் கேட்கிறாள். "அதெல்லாம் நான் நினைக்கவே இல்லை. ஜெனி டெலிவரி ரொம்ப கிரிட்டிக்கல்லா இருந்துது. மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலில் தான் இருந்துது. நான் உடனே கிளம்பனும்" என சொல்கிறான் செழியன்.
"உங்களுக்கு குழந்தை பிறந்துடுச்சு. உங்க மனைவியும் வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்ப நீங்க என்னை மறந்துடுவீங்களா? அப்படி நீங்க பண்ணீங்கன்னா நான் அவ்வளவு தான், உடைஞ்சு போடுவேன். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் என்னோட இருங்க ப்ளீஸ்" என கெஞ்சி செழியனை எப்படியோ சமாதானம் செய்து விடுகிறாள் மாலினி.
பாக்கியா செழியனுக்கு போன் செய்து பார்க்கிறாள், ஆனால் செழியன் போனை எடுக்கவே இல்லை. அவளுக்கு செழியன் மீது சந்தேகம் அதிகமாகிறது. அடுத்த நாள் காலை செழியன் ஹாஸ்பிடலுக்கு கிளம்ப., "சீக்கிரம் போய் குழந்தையை பார்த்துட்டு இங்க வந்துடுங்க. நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன்" என சொல்லி செழியனை அனுப்பி வைக்கிறாள் மாலினி.
எழில் வீட்டில் இருக்க இரண்டு பேர் பேங்கில் இருந்து வருவதாக கூறுகிறார்கள். "அம்மாவை பார்க்கணுமா? அவங்க வீட்ல இப்போ இல்லை. என்ன விஷயம் சொல்லுங்க" என்கிறான் எழில். அவர்கள் கோபியைப் பற்றி விசாரிக்கிறார்கள். எழில் என்ன விஷயம் எனக் கேட்க "கோபி சார் கிரெடிட் கார்டு பேமெண்ட் மூணு நாலு மாசமா கட்டவே இல்லை. போன் பண்ணாலும் எடுக்கவே இல்லை. அது தான் நேரில் வந்து கலெக்ஷன் பண்ணிட்டு போலாம்னு வந்தோம்" என சொல்லவும் ராதிகாவின் வீட்டை காண்பித்து அவர் அங்கே தான் இருக்கிறார் என சந்தோஷமாக கோர்த்து விடுகிறான் எழில்.
ராதிகாவும் அவளுடைய அம்மாவும் கோபியை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே வந்த கோபி, “யாரைஒ பத்தி பேசுறீங்க” எனக் கேட்டதும் மழுப்பி விடுகிறார்கள். அப்போது பேங்கில் இருந்த வந்த நபர்கள் “கிரெடிட் கார்டு விஷயமா வந்து இருக்கோம்” என சொல்லவும் அவர்களை நைசாக வெளியில் அழைத்து சென்று விடுகிறார். “பேமென்ட் சீக்கிரமா கட்டிடுவேன். இனிமே வீட்டுக்கு வராதீங்க, எதுவா இருந்தாலும் ஆபிஸ் அட்ரெஸுக்கு வாங்க” என சொல்கிறார் கோபி.
புது வீடு அட்ரெஸை அப்டேட் செய்ய சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பி விடுகிறார்கள். வீட்டுக்கு கோபி சென்றதும் ராதிகா என்ன விஷயம் எனக் கேட்கிறாள். அவளிடம் பேங்க்கில் இருந்து “கிரெடிட் கார்டு வாங்கிக்க சொல்லி கம்பெல் பண்ணறாங்க” என சொல்லி சமாளித்து விடுகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.