Baakiyalakshmi : பாக்யா செய்த சத்தியம்.. கோபியை மிரட்டும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமியில் இன்று நடப்பது என்ன?
Baakiyalakshmi Oct 23 : பாக்கியாவிடம் வீட்டை விட்டு வெளியில் போக கூடாது என சத்தியம் வாங்கிய ராமமூர்த்தி. மாலினி மீது பாக்கியாவுக்கு வந்த சந்தேகம். இன்றைய பாக்கியலட்சுமியில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் கோபியை ஈஸ்வரி வீட்டுக்கு அழைத்து வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கோபியை ஈஸ்வரி வீட்டுக்குள் அழைத்து சென்றதும் எழில் பயங்கரமாக சத்தம் போடுகிறான். "இவர் இங்க இருந்தா எங்கம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்" என எழில் சொல்ல " யாரும் எதுவும் பேசக்கூடாது. கோபிக்கு உடம்பு சரியாகுற வரைக்கும் அவன் இங்க தான் இருப்பான். கோபியை உள்ள கூட்டிட்டு போங்க" என ஈஸ்வரி சொன்னதும் இனியாவும் செழியனும் கோபியை உள்ளே அழைத்து செல்கிறார்கள்.
"அப்ப இனியாவும் அம்மாவும் ஹால்ல வந்து படுபத்துப்பாங்களா?" என எழில் கேட்க "நீங்க யாரும் ரூமை விட்டு கொடுக்க வேண்டாம். கோபி என்னோட ரூம்ல இருக்கட்டும்" என ஈஸ்வரி சொல்கிறார். கோபியை உள்ளே அழைத்து சென்றதும் "நீ வரவில்லை என்றால், உன்னையே நினைத்து நினைத்து எனக்கு ஏதாவது ஆகிவிடும். என்னோட கொஞ்ச நாளைக்கு வந்து இரு" என சொல்லி தான் கோபியை ராதிகா வீட்டில் இருந்து ஈஸ்வரி அழைத்து வந்ததாக சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
கோபி ஈஸ்வரியிடம் "நான் இங்கே இருந்தால் தேவையில்லாமல் நிறைய பிரச்சினைகள் வரும். எனக்கு சுய கெளரவம் கொஞ்சமாவது இருக்கணும்" என சொல்ல "உன்னை யாரும் எதவும் பேசாமல் நான் பார்த்து கொள்கிறேன்" என்கிறார்.
பாக்கியா ராமமூர்த்தியிடம் நியாயம் கேட்கிறாள். ராமமூர்த்தி பாக்கியாவிடம் "அவனுக்கு உடம்பு சரியில்லை என சொன்னதில் இருந்து சரியா தூங்க கூட இல்லை. அவனுக்கு சரியானதும் நானே அவனை அனுப்பிவிடுகிறேன். இது உன்னுடைய வீடு நீ ஏன் வீட்டை விட்டு வெளியில் போக வேண்டும். நீ இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என என் மேல சத்தியம் பண்ணு" என சொல்லி சத்தியம் வாங்கி கொள்கிறார் ராமமூர்த்தி.
ராதிகாவிடம் மயூ கோபியை பற்றி விசாரிக்க ராதிகாவின் அம்மா "உங்க அப்பா அவங்க அம்மாவோட அவங்க வீட்டுக்கு போயிட்டார். இனிமே இங்க வரமாட்டார்" என சொல்கிறார். ராதிகாவின் அண்ணனுக்கு போன் செய்து நடந்த விஷத்தை பற்றி சொல்கிறார். "நாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா?" என ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் சொல்ல "நான் எங்கேயும் வரமாட்டேன். விருப்பம் இல்லாதவரை இழுத்துப்பிடித்து கூட்டிட்டு எல்லாம் வரவேண்டாம்" என சொல்லி கோபித்து கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள்.
பாக்கியா ஜெனி மற்றும் செழியன் உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கும் போது மாலினி வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறாள். ஜெனி சாதாரணமாக மாலினியை வரவேற்றாலும் செழியன் முகமே மாறிவிடுகிறது. அவள் பேசுவதில் ஏதோ தப்பு இருப்பதாக பாக்கியாவுக்கு தோன்றுவதால் அவள் மீது சந்தேகம் வருகிறது. செல்வியும் பாக்கியாவிடம் சென்று "இந்த பொண்ணு எதுக்கு அடிக்கடி வீட்டுக்கு வருது. ஏதோ சரியில்லை" என சொல்ல பாக்கியாவும் "எனக்கும் அப்படி தான் தோணுது" என்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.