Jai Akash In Sun TV: வெள்ளித்திரை டூ சின்னத்திரை... இப்போ சன் டிவியில் என்ட்ரி... ஜெய் ஆகாஷ் நடிக்கும் புது சீரியல்!
2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படம் பிளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. அதில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷூக்கு தொடர்ந்து ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வெள்ளித்திரையில் ஓஹோவென கொடி கட்டிப் பறந்த நடிகர் நடிகைகள் பலரும் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து ரசிகர்களுக்கு மிக நெருக்கமாவது என்பது காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான். அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய் ஆகாஷ்.
2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படம் பிளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. அதில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷூக்கு தொடர்ந்து ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இலங்கையைச் சேர்ந்த தமிழரான ஜெய் ஆகாஷை தெலுங்கு திரையுலக ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அவருக்கு பெரிய அளவில் தமிழ் திரையுலகில் வரவேற்பு கிடைக்கவில்லை. ரோஜாவனம், ரோஜாக் கூட்டம், இனிது இனிது காதல் இனிது என பல தமிழ் படங்களில் ஜெய் ஆகாஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளித்திரையில் தமிழ் திரைப்படங்களில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களை நிச்சயம் கவர்வேன் என சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான "நீ தானே என் பொன்வசந்தம்" என்ற சீரியல் மூலம் அடியெடுத்து வைத்த ஜெய் ஆகாஷுக்கு அவர் நினைத்தது போலவே சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, மற்றும் தெலுங்கு தொடரான ‘அனு அனே நேனு’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து சீரியலில் அபிமன்யு என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சீரியல்களில் நடித்து வந்தாலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சீரியலின் பெயர், என்ன கதாபாத்திரம், என்று முதல் தொடங்கும், ஒளிபரப்பாகும் நேரம் இப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இந்தப் புதிய சீரியல் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் டிவி சீரியல்கள் என்றுமே சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவனம் ஈர்க்கும் என்பதால் டிஆர்பி ரேட்டிங்கில் பட்டியலிலும் முன்னணி வகிக்கின்றன.
ஒரு சில ரசிகர்கள் ஒரு வேளை ஜெய் ஆகாஷ் நடிக்கும் இந்தப் புதிய சீரியல், தெலுங்கில் அவர் நடித்து வரும் 'அனு அனே நேனு' சீரியலின் ரீ மேக்காக இருக்குமோ என யூகிக்கிறார்கள்.