மேலும் அறிய

'திருமதி செல்வம்' முதல் 'வாணி ராணி' வரை.. தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு

ஆரம்பகாலத்தில் சினிமா கலைஞர்களுக்கும், தொலைக்காட்சி வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கும் தமிழ்நாடு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருதுகள் தாமதம் ஏன்? 

தமிழ் சினிமாவின் மறுபக்கங்களாக இருந்த திரைக்கலைஞர்களே பின்னாளில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் அமர்ந்தனர். இதனால் தமிழ் சினிமாவும் ஆட்சியாளர்களும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருந்தனர். ஆரம்பகாலத்தில் சினிமா கலைஞர்களுக்கும், தொலைக்காட்சி வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கும் தமிழ்நாடு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்த விருதுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கபடாமல் இருந்த நிலையில், இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது 2015 ஆம் ஆண்டு துவங்கியது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு,  2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை.

அதிமுகவின் இறுதிகாலக்கட்டத்தில்  கலைமாமணி விருதுகள் மட்டும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறமலேயே இருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவுற்ற நிலையில் தமிழ்நாடு அரசு அந்த விருதுகளை வழங்கும் விழாவை நடத்தி விருதுகள் வழங்கி கலைஞர்களை கவுரப்படுத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: 

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) -  திருமதி செல்வம்
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)-  வசந்தம்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர் - டெல்லி கணேஷ் 
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - பீலி சிவம் (மறைவு)
  • சிறந்த கதாநாயகன் - ஜி.குமார் (உறவுகள் மற்றும் சிவசக்தி)
  • சிறந்த கதாநாயகி - சங்கீதா (திருப்பாவை)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் - கோ.சிவன் ஸ்ரீனிவாசன் (திருப்பாவை)
  • சிறந்த குணச்சித்திர நடிகை - வடிவுக்கரசி ( திருமதி செல்வம்)
  • சிறந்த வில்லன் நடிகர் -  ஷிரவன் (தங்கமான புருஷன்)
  • சிறந்த வில்லி நடிகை - கௌதமி (திருமதி செல்வம்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஹரிணி (திருமதி செல்வம்)
  • சிறந்த இயக்குநர் - இ. விக்கிரமாதித்தன் (கோகிலா)
  • சிறந்த கதையாசிரியர் - வி.திருச்செல்வம் (கோலங்கள்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் - வேதம் புதிது கண்ணன் (வசந்தம்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர்  - க.ப.நா.செல்வராஜ் (வசந்தம்)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - பொன் சந்திரா (தங்கமான புருஷன்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் - கே.உதயகுமார் (திருப்பாவை)
  • சிறந்த பின்னணி இசை - இளங்கோ (மேகலா)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - வினோத் (சிவசக்தி)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - ஜெயகீதா (கோலங்கள்)

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - உறவுக்கு கைகொடுப்போம் 
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)-  தென்றல்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர் - சுபலேகா சுதாகர் 
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - பூவிலங்கு மோகன்
  • சிறந்த கதாநாயகன் - தீபக் (தென்றல்)
  • சிறந்த கதாநாயகி - ஸ்ருதி (தென்றல்)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் - வி.சி.ஜெயமணி (திருமதி செல்வம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை -  சீமா (தங்கம்)
  • சிறந்த வில்லன் நடிகர் - நிழல்கள் ரவி (தென்றல்)
  • சிறந்த வில்லி நடிகை -  தேவி ப்ரியா (செல்லமே)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி யுவனா பார்கவி (உறவுக்கு கைகொடுப்போம்)
  • சிறந்த இயக்குநர் - எஸ்.குமரன்(திருமதி செல்வம்)
  • சிறந்த கதையாசிரியர் - சேக்கிழார் (உறவுக்கு கைகொடுப்போம்)
  •  சிறந்த திரைக்கதையாசிரியர் - அசோக் குமார் (தங்கம்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் - கே.என். நடராஜன் (முந்தானை முடிச்சி)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - எஸ்.டி.மாட்ஸ் (மாடசாமி) (திருமதி செல்வம்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் - சந்துரு (தென்றல்)
  • சிறந்த பின்னணி இசை - தினா (செல்லமே)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - டி.என்.பாலு கதிரவன் (தங்கம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - ரேணுகா (அபிராமி)

2011 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு)- சாந்தி நிலையம்
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)- நாதஸ்வரம்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர்- நித்யா ரவீந்தர்
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்- சண்முக சுந்தரம்(மறைவு)
  • சிறந்த கதாநாயகன் - சீனு ரங்கசாமி (மாதவி)
  • சிறந்த கதாநாயகி - சந்தோஷி  (இளவரசி)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் - சந்தானம் (திருமதி செல்வம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை - ரேவதி சங்கர் (உறவுகள்)
  • சிறந்த வில்லன் நடிகர் - ஆர் ராமச்சந்திரன் (சாந்தி நிலையம், திருமதி செல்வம்)
  • சிறந்த வில்லி நடிகை - ஸ்ரீவித்யா (தென்றல்)
  • சிறந்த இயக்குநர் - கே.பாலசந்தர் (மறைவு) (சாந்தி நிலையம்)
  • சிறந்த கதையாசிரியர் - கே.பாலசந்தர் (மறைவு) (சாந்தி நிலையம்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் - எஸ். வெங்கட்ராமன் (சாந்தி நிலையம்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் - எழில் வரதன் (தென்றல்)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - ரகுநாத ரெட்டி (சாந்தி நிலையம்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் - காரல் மார்க்ஸ் (கொடி முல்லை)
  • சிறந்த பின்னணி இசை - ராஜேஷ் வைத்யா (சாந்தி நிலையம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - கார்த்திக் (டிங்கு) (திருமதி செல்வம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - ஹரிணி (குழந்தை குரல்) (உறவுக்கு கைகொடுப்போம்)

2012 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - இருமலர்கள் 
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு) - உதிரிப்பூக்கள்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர் - கோவை அனுராதா
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - எஸ்.என்.பார்வதி
  • சிறந்த கதாநாயகன் - ஸ்ரீகர் பிரசாத் (இளவரசி)
  • சிறந்த கதாநாயகி - ஸ்ரீதுர்கா ( உறவுகள்)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் - சேத்தன் கடம்பி (உதிரிப்பூக்கள்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை - விஜி சந்திரசேகர் ( அழகி)
  • சிறந்த வில்லன் நடிகர் - பாபூஸ் ( சிவசங்கரி)
  • சிறந்த வில்லி நடிகை - சாதனா (தென்றல்)
  • சிறந்த இயக்குநர் - எஸ்.ஜே. எட்வர்ட் ராஜ் (இருமலர்கள்)
  • சிறந்த கதையாசிரியர் - இந்திரா சௌந்திர ராஜன் (ருத்ரம்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் - கென்னடி ( இரு மலர்கள்)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் - மருது சங்கர் (அழகி)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - ராஜசேகரன் (ருத்ரம்)
  • சிறந்த படத்தொகுப்பாளர் - எஸ்.ஆர்.ஜி.விஜய் கண்ணன் (வைராக்கியம்)
  • சிறந்த பின்னணி இசை - பால பாரதி (ருத்ரம்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - தங்கராஜ் (உறவுகள்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) -பிரமிளா (பல தொடர்கள்)
  • சிறந்த தந்திர காட்சியாளர் - மதி செந்தில் (ருத்ரம்)

2013 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு)-  வாணி ராணி
  • சிறந்த நெடுந்தொடர் (2 ஆம் பரிசு)- தெய்வ மகள்
  • ஆண்டின் சிறந்த சாதனையாளர்- குட்டி பத்மினி 
  • ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்- வியட்நாம் வீடு சுந்தரம்
  • சிறந்த கதாநாயகன் - வேணு அரவிந்த் (வாணி ராணி)
  • சிறந்த கதாநாயகி - ரேணுகா (அமுதா ஓர் ஆச்சரியக்குறி)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் - மௌலி (நாதஸ்வரம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை - அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி)
  • சிறந்த வில்லன் நடிகர் - மனோகர் (புகுந்த வீடு)
  • சிறந்த வில்லி நடிகை -ரேகா (தெய்வ மகள்)
  • சிறந்த இயக்குநர் - எம்.கே.அருந்தவ ராஜ் (இளவரசி)
  • சிறந்த கதையாசிரியர் - எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்)
  • சிறந்த திரைக்கதையாசிரியர் - குரு சம்பத்குமார் (இளவரசி)
  • சிறந்த உரையாடல் ஆசிரியர் - ஷேக் தாவூத் (அமுதா ஓர் ஆச்சரியக்குறி)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - தமிழ் மாறன் (அமுதா ஓர் ஆச்சரியக்குறி)
  • சிறந்த படத்தொகுப்பாளர் - வி.கார்த்திக் (உதிரிப்பூக்கள்)
  • சிறந்த பின்னணி இசை - இலக்கியன் (உதிரிப்பூக்கள்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - சபரி மாதன் (தெய்வ மகள்)
  • சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - சுதா (புகுந்த வீடு)
  • சிறந்த தந்திர காட்சியாளர் - எம்.சுப்பிரமணி, எம்.கணேசன், ஆர்.எம்.நாகராஜ் (சிவசங்கரி)

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget